மேலும் அறிய

வானமே எல்லை! கேரளாவின் முதல் பழங்குடியின ஏர் ஹோஸ்டஸ் கோபிகா

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா கோவிந்தன் அம்மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் ஏர் ஹோஸ்டஸ் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா கோவிந்தன் அம்மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் ஏர் ஹோஸ்டஸ் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

கோபிகா வானில் பறக்கும் தனது கனவை நனவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.கண்ணூர் மாவட்டம் அலகோட் பஞ்சாயத்து தரப்பன்குன்னு காலனியைச் சேர்ந்த தம்பதி சப்பிலி கோவிந்தன், பிஜி. இவர்களின் மகள் தான் கோபிகா.இவர் தற்போது மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் உள்ளார்.

சிறுவயது கனவு:

பள்ளி நாட்கள் முதலே கோபிகாவின் கனவு விமான பணிப்பெண் ஆகவேண்டும் என்பதே. கண்ணூர் எஸ்.என்.கல்லூரியில் வேதியியல் பயின்றார் கோபிகா. அப்போதும் அவர் மனதில் விமானப் பெண் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் கோபிகாவின் பெற்றோர் தினக் கூலிகள். அவர்களுக்கு தனியார் கல்லூரியில் கோபிகாவை படிக்கவைக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பில்லை. 

இந்நிலையில் இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. கோபிகாவுக்கு அவர் வாழும் பகுதியில் உள்ள பழங்குடிகள் முன்னேற்ற அதிகாரி மூலம் ஒரு விஷயம் தெரியவந்தது. அதாவது அவர், சர்வதேச ஏர் ட்ரான்ஸ்போர் அசோஷியேசனில் அரசு உதவியுடன் கஸ்டமர் சர்வீஸ் கோர்ஸ் பயில முடியும் என்பதை கோபிகா தெரிந்து கொண்டார்.

பின்னர் எவ்வித தாமதமும் இன்றி அவர் ஐஏடிஏவில் சேர விண்ணப்பித்தார். அங்கு பயிற்சி மேற்கொண்ட பின்னர் ஏவியேஷன் ட்ரெயினிங் அகடமியில் சேர்ந்தார். வயநாட்டில் உள்ள இந்த அகடமியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக்காக சேர்ந்தார். பின்னர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சேர நேர்காணலை எதிர்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றார். இன்னும் ஒரே மாதத்தில் அவர் பணியில் இணைவார்.

முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர்

நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராகியுள்ளார் திரௌபதி முர்மு. இது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஒடிஷாவின் ராய்ரங்கப்பூரில் பிறந்தவர் திரௌபதி முர்மு. கடந்த 1997ஆம் ஆண்டு, ராய்ரங்கப்பூர் நகரப் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் திரௌபதி முர்மு. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ராய்ரங்கப்பூரில் இரண்டு முறை எம்.எல்.ஏ பதவி வகித்த திரௌபதி முர்மு கடந்த 2009ஆம் ஆண்டு பிஜு ஜனதா தளம் பாஜக கூட்டணியை முறித்த போது, அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். மேலும், கடந்த 2015 முதல் 2021 வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் திரௌபதி முர்மு. 

இந்நிலையில் பழங்குடியின பெண் விமான பணிப்பெண் செய்தி உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget