kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: கேரளாவில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன், யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
kerala Elephant Attack: பாலக்கட்டாட்டில் ஆற்றை கடந்து கொண்டிருந்த, யானைக் கூட்டத்தை படம்பிடித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யானை தாக்கி கேமராமேன் பலி:
பாலக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் தனியார் தொலைக்காட்சியின், ஒளிப்பதிவாளர் ஏவி முகேஷ் என்பவர் உயிரிழந்தார். தாக்குதல் நடந்தபோது அவர் கோட்டேக்காட்டில் செய்தி சேகரித்து கொண்டிருந்தார். காட்டு யானைகள் கூட்டம் ஆற்றை கடந்து சென்றதை படமெடுக்கும் போது கேமராமேன் மீது யானை தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்த முகேஷ் உடனடியாக பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Kerala: A Palakkad-based video journalist, AV Mukesh died in a wild elephant attack in Kottekad, Palakkad. The incident happened when he filming a herd of wild elephants crossing the river. He was immediately rushed to Palakkad District Hospital but could not be saved. pic.twitter.com/FRq5r4fdkF
— ANI (@ANI) May 8, 2024
யார் இந்த முகேஷ்?
மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியைச் சேர்ந்த முகேஷ், மறைந்த உன்னி - தேவி தம்பதியின் மகனாவார். அவர் மனைவியின் பெயர் திஷா. தனியார் தொலைக்காட்சியின் டெல்லி பீரோவில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், கடந்த ஓராண்டாக பாலக்காடு பீரோவில் பணியாற்றி வந்தார். டெல்லியில் பணியாற்றியபோது 'ஆதிஜீவனம்' என்ற பெயரில், அந்நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி தளத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை முகேஷ் எழுதியுள்ளார்.