Kerala Nun Rape Case: கேரள கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு: விடுதலையானார் பிஷப் பிராங்கோ
கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை செய்யப்பட்டார். கேரள பிஷப் பிராங்கோ மூல்லக்கல் மீது கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி கேரள பிஷப் பிராங்கோ விடுதலை செய்யப்பட்டார்
கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். 55 வயதான இவர் தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரியே இது தொடர்பாக தேவாலய விசாரணை குழுவிடம் புகார் அளித்தார். 2014 முதல் 2016 வரையில் கிட்டத்தட்ட 13 முறைக்கும் மேல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.
ஆனால் 3 வருடங்கள் கடந்தும் அவரது புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து 2018ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதிலும் பிஷப் கைது செய்யப்படவில்லை. பின்னர் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் பிஷப் கைது செய்யப்பட்டார். தொடர் மிரட்டல்கள் கொடுக்கப்பட்டபோதும் தன்னுடைய புகாரில் உறுதியாக இருந்துள்ளார் அந்த கன்னியாஸ்திரி. இதற்கிடையே 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிராங்கோவுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் தொடர்ந்து வழக்கு நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் 40க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி பிராங்கோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கன்னியாஸ்திரி தரப்பினர் தெரிவித்துள்ளனர்
Kerala: Kottayam court acquits accused Franco Mulakkal in the nun rape case pic.twitter.com/UKgr23mt1A
— ANI (@ANI) January 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்