Rajinikanth Pongal Wishes | "ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது" : சூப்பர் ஸ்டாரின் பவர்ஃபுல்லான பொங்கல் வாழ்த்து..
"ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது" என்று சூப்பர் ஸ்டாரின் பவர்ஃபுல்லான பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
#rajini #pongL #பொங்கல்வாழ்த்து #Chennai #2022 @RIAZtheboss pic.twitter.com/1omulQKzqS
— meenakshisundaram (@meenakshinews) January 14, 2022
இந்த நிலையில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரும் இந்தியாவின் முன்னணி நடிகருமான ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) January 14, 2022
அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, “ அனைவருக்கும் வணக்கம். ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களைம் கண்டிப்பாக கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு கூடுவது வழக்கம். நடிகர் ரஜினிகாந்தும் அவரது வீட்டின் முன்பு கூடும் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார். அண்ணாத்த படம் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறி, தற்போது அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். https://t.co/5jTGPQbD99
— Rajinikanth (@rajinikanth) January 14, 2022
ரஜினிகாந்த் டுவிட்டர் மட்டுமின்றி, அவரது மகள் ஐஸ்வர்யா நடத்தி வரும் ஹூட் செயலியிலும் தனது ரசிகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்