Watch Video: பைப் திறந்தா... 500 ரூபாய் தாள் கொட்டுது... பதுக்கிய இடத்தை பிதுக்கிய அதிகாரிகள்!
கர்நாடகாவில் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் தங்கம் மற்றும் பணமழை பொழிகிறது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், பொறியாளர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் பைப் லைனில் பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்தப்ப கவுடா வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுக்கட்டாக பணத்தை வீட்டில் உள்ள பைப்புகளில் ஒளித்து பாதுகாத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Its raining gold and cash in Karnataka, with ACB raids on across the state, A PWD department official Shantappa Gowda in Kalaburgi comes under the radar of ACB, where he had his money safeguarded in a drain pipe at his house. Over ₹40 Lakh seized. #Karnataka #ACBRaid pic.twitter.com/2c832hOJev
— Pinky Rajpurohit (ABP News) 🇮🇳 (@Madrassan_Pinky) November 24, 2021
மேலும், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் விவசாயத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரியான டி.எஸ்.ருத்ரேஷப்பா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நகைகள் மற்றும் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊழல் தடுப்புப் பிரிவு இன்று கர்நாடகா முழுவதும் 68 இடங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக ஒரே நேரத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. பெங்களூரில் உள்ள பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் மற்றும் பிற அலுவலகங்கள்.
மங்களூரு, பெங்களூரு, மண்டியா மற்றும் சில மாவட்டங்களில் உள்ள 15 அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 8 எஸ்பிக்கள், 100 அதிகாரிகள் மற்றும் 300 ஊழல் தடுப்பு படை ஊழியர்கள் தலைமையிலான குழுக்கள் சோதனை நடத்தினர்.
"விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் பணம், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்கிறோம்" என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்