![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: சீறிப்பாய்ந்து வந்து லாரிக்கு அடியில் புகுந்த கார்... 3 பேர் பலி - பதைப்பதைக்க வைக்கும் வீடியோ!
கர்நாடக மாநிலத்தில் கார் ஒன்று விபத்து உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் மிகவும் பதைப்பதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
![Watch Video: சீறிப்பாய்ந்து வந்து லாரிக்கு அடியில் புகுந்த கார்... 3 பேர் பலி - பதைப்பதைக்க வைக்கும் வீடியோ! Karnataka: cctv footage Car ramming into truck at toll gate near chitradurga creates huge shock in twitter Watch Video: சீறிப்பாய்ந்து வந்து லாரிக்கு அடியில் புகுந்த கார்... 3 பேர் பலி - பதைப்பதைக்க வைக்கும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/42e7bae38999368c20cf9daaab463dbc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பயங்கரமான விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவம் இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் முதலில் சுங்கசாவடியில் ஒரு லாரி ஒன்று கட்டணம் செலுத்த நின்று கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் மிகவும் வேகமாக வந்த கார் ஒன்று தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னே வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த காரின் முன்பகுதி லாரியின் அடியில் சென்று மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. காரின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளது.
Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams into a tanker waiting at the toll booth. 3 people killed. Investigation on. pic.twitter.com/UaqkTQJDwO
— Deepak Bopanna (@dpkBopanna) February 3, 2022
அந்த லாரியை எடுத்தப் பிறகு அங்கு இருந்த சுங்கசாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் இருந்தவர்களின் நிலையை பார்த்துள்ளதாக தெரிகிறது. அதில் காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்பரை பதைப்பதைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தமிழர்களின் குரலாக உரையாற்றிய ராகுல் காந்திக்கு நன்றி... முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)