CM Stalin Thanks Rahul Gandhi | தமிழர்களின் குரலாக உரையாற்றிய ராகுல் காந்திக்கு நன்றி... முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்..
நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நன்றி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நன்றி என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியும், சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்.
You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. (2/2)
— M.K.Stalin (@mkstalin) February 3, 2022
நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று முதல் சோஷியல் மீடியா வைரலாக உள்ளார் ராகுல்காந்தி. தமிழ்நாடு தொடர்பான இரண்டு வீடியோக்களால் வைரலானார் ராகுல். 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்