ISKP : "வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் வெடிகுண்டு வெடிக்கும்", இந்தியாவுக்கு ஐஎஸ்கேபி கொடுத்த மிரட்டல்..
அந்த வீடியோவில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, போராடிய இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் கொண்டு விடியோ, அதனை தொடர்ந்து மனித வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை அவமதித்து நுபுர் ஷர்மா பேசியதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், இஸ்லாமிய நாடிகள் குரோஷன் மாகாணம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு மனித வெடிகுண்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் அவமதிப்பு
ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இவரது கருத்து சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகளான கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.
போராட்டம்
இதனைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா மற்றும் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் நுபுர் ஷர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தாமதமானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
வீடு இடிப்பு
இதனால் நாட்டில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். போராட்டத்தில் பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பட்டன. இதுமட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது. இதில் முஸ்லீம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. இதையடுத்து ஜாவேத்தின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஐஎஸ்கேபி விடியோ
இதனை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் குரோஷன் மாகாணம் ஒரு விடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு இடம்பெற்றுள்ளது. பிறகு போராடிய இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் கொண்டு விடியோ இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் தாலிபானின் மவுனத்தையும் விமர்சித்து உள்ளார்கள்.
அல்-கொய்தா மிரட்டல்
முகமது நபியை அவமதித்ததற்குப் பழிவாங்கும் நோக்கில், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தாவும் (AQIS) சமீபத்தில் டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்