(Source: Poll of Polls)
Adani and IRCTC : இந்தியன் ரயில்வேஸுக்கு போட்டியாக மாறுகிறதா அதானி குழுமம்..? என்னதான் நடக்கிறது?..ஐஆர்சிடிசி விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 14.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 81% இ-டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனம் மூலம்தான் இந்தியன் ரயில்வே டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதேபோல, ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் ரயில்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும் ட்ரெயின்மேன் செயலி பயன்படுகிறது.
இந்தியன் ரயில்வேஸுக்கு போட்டியாக மாறுகிறதா அதானி குழுமம்..?
இந்நிலையில், அதானி குழுமம், ட்ரெயின்மேன் செயலியை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. தற்போது, ஐஆர்சிடிசி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ட்விட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐஆர்சிடிசி, "அதானிக்கு சொந்தமான இயங்குதளம், ஐஆர்சிடிசியுடன் இணைந்து செயலபட்டு வருகிறது. இந்த சூழலில், உரிமையாளர் மாறுவதால் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது.
ஐஆர்சிடிசியின் 32 கூட்டு நிறுவனங்களில் ட்ரெயின்மேனும் ஒன்று. முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில் 0.13 சதவிகித டிக்கெட்டுகள் ட்ரெயின்மேன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 14.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 81% இ-டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்படுகின்றன. பரப்பப்படுவது ஒரு தவறான தகவல். ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட 32 கூட்டு நிறுவனங்களில் ட்ரெயின்மேனும் ஒன்று. அதன் பங்குகளை வாங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.
விளக்கம் அளித்த ஐஆர்சிடிசி:
அனைத்து விதமான ஒருங்கிணைப்பும் செயல்பாடுகளும் ஐஆர்சிடிசி மூலமே தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இது, ஐஆர்சிடிசிக்கு உதவிகரமாக இருக்கும். ஐஆர்சிடிசிக்கு அச்சுறுத்தலாகவோ சவாலாகவோ இருக்காது" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி குழுமம் முதலில் ஐஆர்சிடிசியுடன் போட்டியிட்டு அதன் பிறகு அதை கைப்பற்றும்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஐஆர்சிடிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "டிக்கெட் விற்பனையை எளிதாக்கி மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் B2B, EGovernance, B2C போன்ற திட்டங்களின் கீழ் பல ஏஜென்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். மேலும் ஐஆர்சிடிசி மற்றும் அதன் முகவர்களுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கிவரும் ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிவருகிறது. இந்தியாவில் தினந்தோறும் சுமார் 2.5 கோடிப் பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். உலகில் 4ஆவது மிகப்பெரிய அரசுத்துறையாக விளங்கிவரும் இந்திய ரயில்வேயில், சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள்.
இதற்கிடையே, ரயில்வே துறையைத் தனியாரிடம் கொடுக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, ரயில்வே ஊழியர்களும் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.