மேலும் அறிய

அந்தரத்தில் விமானம்.. எமர்ஜென்சி கதவை திறந்த பயணி.. பதறிய பைலட்!

அந்தரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவை திறக்க முயற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் இருந்து கிளம்பிய விமானம், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவை திறக்க முயற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.

விமானத்தில் தொடரும் சர்ச்சை சம்பவங்கள்:

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இன்று காலை இண்டிகோ விமானம் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறினர். விமான குழுவினர், விமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர்.

விமானம், காலை 10:10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென ஒரு பயணி, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்தார். இது, விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விமானிகள் மற்றும் விமானக் குழுவினர் நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்ள தொடங்கினர். குறிப்பிட்ட அந்த பயணி கைது செய்யப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார்.

திக் திக் சம்பவம்:

அவசரகால கதவை திறந்த பயணியின் பெயர் சிராஜ் கித்வாய். இவர், ஆக்ஸிஸ் வங்கியில் பணியாற்றி வருகிறார். தான் தற்செயலாக அவசரகால கதவை திறந்ததாகவும் விளக்கம் அளித்தார். அவசரகால கதவு திறக்கப்பட்டதும், விமானிக்கு நேரடிச் செய்தி அனுப்பப்பட்டது. பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ விமான நிறுவனம், "விமானத்தில் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் எங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள விமான நிலைய காவல் நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 20 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை

Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்

Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்

கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!

Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?

பெங்களூரில் பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை! RBI அதிகாரிகள் போல் நடித்து அதிர்ச்சி கொடுத்த கும்பல்!

Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!

Embed widget