![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கடத்தப்படும் இந்திய பெண்கள்! ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்பனை! தப்பித்த பெண்கள் கூறிய திடுக் தகவல்கள்!
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக 100க்கும் மேற்பட்ட இந்திய இளம்பெண்கள் கடத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
![கடத்தப்படும் இந்திய பெண்கள்! ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்பனை! தப்பித்த பெண்கள் கூறிய திடுக் தகவல்கள்! indian young girls kidnapping arab countries and ISIS கடத்தப்படும் இந்திய பெண்கள்! ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்பனை! தப்பித்த பெண்கள் கூறிய திடுக் தகவல்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/18/310e705318476ad0e104ca8b96e04ded_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு உள்ளனர். இந்த நிலையில், வளைகுடா நாட்டில் இருந்து தப்பித்து சொந்த ஊருக்கு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, வளைகுடா நாடுகளான குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு கேரளா உள்பட இந்தியாவில் இருந்து இளம்பெண்களை வேலைக்கு அனுப்புவதும், பின்னர் அந்த பெண்களை அங்குள்ளவர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்துவதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்களை சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தால் மத்திய புலனாய்வுத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
கேரளாவின் கொச்சியில் உள்ள நிறுவனம் மூலம் இளம்பெண்கள் துபாய், குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அரபிகளின் வீடுகளில் உள்ள குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்று அழைத்துச்செல்லப்படும் அவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 60 ஆயிரம் சம்பளம், இலவச விசா, தங்குமிடம் இலவசம் போன்ற விளம்பரங்களால் ஆட்களை பிடிக்கின்றனர்.
இதை நம்பி ஏமாந்த இளம்பெண்கள் பலரும் குடும்ப சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இந்த ஏஜென்சி மூலமாக செல்கின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அவர்கள் கொத்தடிமைகளாகவும், அவர்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. கண்ணூரைச் சேர்ந்த கசாலி என்ற மஜீத் மற்றும் அஜூமோன் ஆகியோர் தலைமையில் செயல்படும் இந்த கும்பல் வளைகுடா நாடுகளுக்கு இளம்பெண்களை கடத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது குவைத்தில் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய புலனாய்வுத்துறை நடத்திய தீவிர விசாரணையில் இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வளைகுடா நாடுகளுக்காக கடத்தப்பட்டதும், அவர்களில் பலர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கேரளாவிற்கு ஏற்கனவே 3 இளம்பெண்கள் தப்பி வந்துள்ள நிலையில், தற்போது குவைத்தில் இருந்தும் 2 இளம்பெண்கள் தப்பி வந்துள்ளனர். குடும்ப சூழல் காரணமாக அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகளின் இச்சைகளுக்கு பயன்படுத்த அனுப்பப்படும் கொடுமை பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)