மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண சீனியர் கட்டண சலுகை: பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்திய ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
![மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண சீனியர் கட்டண சலுகை: பொதுமக்கள் மகிழ்ச்சி Indian railways implement concession of train tickets price மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண சீனியர் கட்டண சலுகை: பொதுமக்கள் மகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/15/bd16cd7a17a641bc21a6d0654898529a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பயணிகளுக்கான சலுகை மீண்டும் அமலுக்கு வரவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி என பல வகைகளில் இயக்கப்படும் ரயில்களில் பிற வழி பயண வாகனங்களை காட்டிலும் கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்கள் எப்போதும் ரயில் பயணங்களை விரும்புவர்.
இந்த ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் உட்பட குறிப்பிட்ட சில பிரிவினருக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் ரயில்வே துறை கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்தது. அதன்பின் வழக்கம்போல ரயில்கள் இயக்கத்தை தொடங்கினாலும் கட்டண சலுகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பல்வேறு அறிவிப்புகளுடன் நிறுத்தப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)