மேலும் அறிய

Warning To Android Users: ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை - ”உடனடியாக இதை செய்யுங்க” மத்திய அரசு அறிவுரை

Warning To Android Users: ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களது சாதனங்களை பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக செய்ய வேண்டியது தொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Warning To Android Users: ஆண்ட்ராய்டு இயங்குதளங்களின் வெவ்வேறு வெர்ஷன்களிலும், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) பல பாதிப்புகளை கண்டறிந்துள்ளது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பிரச்னை:

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN), ஆண்ட்ராய்டின் பல்வேறு வெர்ஷன் இயங்குதளங்களிலும் பல பாதிப்புகளை கண்டறிந்துள்ளது. 11, 12,12L, 13 மற்றும் 14 உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் இந்த பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பரவலான பிரச்னையால் அதிக எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான CERT-IN வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதுள்ள பாதிப்புகளை பயன்படுத்தி முக்கியமான தகவல்களை திருடுவது,  உயர்ந்த சலுகைகள் பெறுவது மற்றும் குறிப்பிட்ட அமைப்பில் இருந்து சேவை கிடைப்பதை தடுப்பது ஆகிய நோக்கில் சைபர் தாக்குதல்: நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பு எதனால்?

"ஃப்ரேம் வர்க், சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள், கர்னல் எல்டிஎஸ், ஆர்ம் பாகங்கள், மீடியாடெக் பாகங்கள், குவால்காம் பாகங்கள் மற்றும் குவால்காமில் மூடப்பட்டுள்ள முக்கிய பாகங்கள்  ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த பாதிப்புகள் ஆண்ட்ராய்டில் இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிக ஆபத்து மிகுந்த பாதிப்புகளை கூகுளும் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான கூகுளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அறிக்கையில், பாதுகாப்பு குறைபாடுகள் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதிக்கிறது. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் Android வெர்ஷனை சரிபார்த்து புதுப்பிப்பது எப்படி?

ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களது சாதானத்தின் செட்டிங்ஸ் பயன்பாட்டிற்குச் சென்று, தங்களது சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண்,  பாதுகாப்பு அப்டேட்களின் நிலை, Google Play சிஸ்டம் நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். அப்டேட்கள் கிடைக்கும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள். 

உங்களிடம் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பு உள்ளது என்பதைச் சரிபார்க்க:

  • தொலைபேசியின் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும்.
  • திரையின் அடிப்பகுதியில் இருக்கும் about phone 2அதைதொடர்ந்து android version ஆகிய ஆப்ஷன்களை கிளிக் செய்யவும்
  •  உங்கள் "ஆண்ட்ராய்ட் வெர்ஷன்", "Android பாதுகாப்பு அப்டேட்கள்" மற்றும் "பில்ட் நம்பர்கள்" ஆகிய தகவல்களை அறியலாம்
  • தேவையிருப்பின் அவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம்

பெரும்பாலான கணினி புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் தானாகவே நடக்கும். புதுப்பிப்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்க:

  • சாதனத்தின் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும்.
  • Security பட்டனை கிளிக் செய்து பிறகு privacy - System & Updates ஆகிய பட்டன்களை அடுத்தடுத்து கிளிக் செய்யவும்
  • பாதுகாப்பு அப்டேட்களுக்காக, பாதுகாப்பு அப்டேட்டை கிளிக் செய்யவும்
  • Google Play சிஸ்டம் அப்டேட்களுக்கு, Google Play சிஸ்டம் அப்டேட்டை கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget