Foodgrains stock: இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு உணவு தானியம் கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு
இந்திய நாட்டுக்கு தேவையான உணவு தாணியம் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பிரதமரின் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீட்டை மேற்கொள்ளவும், அவசியமான உணவு தானிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, மத்தியத் தொகுப்பின் கீழ் மத்திய அரசு போதுமான உணவு தானியங்களை கையிருப்பில் வைத்துள்ளது.
இருப்பு நிலவரம்:
டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நிலவரப்படி, மத்தியத் தொகுப்பில் சுமார் 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 111 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உள்ளது என்றும், ஜனவரி 1, 2023 இல் சுமார் 159 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் 104 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் ஆண்டின் தேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை மற்றும் அரிசியின் இருப்பு நிலை எப்போதும் இந்த தேதிகளின் தேவைக்கும் அதிகமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1, 2022 அன்று 205 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 103 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த ஆண்டு கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது குவிண்டாலுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.110 அதிகரிக்கப்பட்டு ரூ. 2125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நல்ல தட்பவெப்ப நிலையுடன், அடுத்த பருவத்தில் கோதுமை உற்பத்தி மற்றும் கொள்முதல் இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு போதிய உணவு தானியம் கையிருப்பில் உள்ளதுhttps://t.co/l6weFEHjiu@PiyushGoyal @AshwiniKChoubey @SadhviNiranjan @fooddeptgoi @FCI_India @FCI_TamilNadu @PIB_India pic.twitter.com/YpyGpC94hn
— PIB in Tamil Nadu (@pibchennai) December 17, 2022
பயிர் விதைப்பு அதிகரிப்பு:
அடுத்த பருவத்தில் கோதுமை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கும் எனவும் முதற்கட்ட மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டை விட கோதுமை பயிர் விதைப்பில் கனிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் உள்ள அனைத்து நலத் திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய தொகுப்பில் போதுமான உணவு தானியங்கள் இருப்பு இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.