மேலும் அறிய

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் விதிகளில் திருத்தம் மேற்கொண்ட நிலையில், தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் மோடி அரசின் அழுத்தத்துக்கு பணிந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.

தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் மடத்தப்படும் தேர்தல் நேர்மையுடன் நடத்தப்படுவது சீர்குலைந்துள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
 
இந்த நிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
தேர்தல் விதிகளில் திருத்தம்:
 
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.
 
குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
 
இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.
 
முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?
 
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
 
நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
 
தலைப்பு செய்திகள்

தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget