இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைய ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவை..ஆய்வில் தகவல்
ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக எஃப். ஐ. சி.சி. ஐ (FICCI) மற்றும் டைலீகல் (Trilegal) நிறுவனத்தின் ’ESG – Into the Mainstream’ என்ற ஆய்வு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதற்கும், பசுமை மாற்றத்திற்கும் முதலீடாக ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக எஃப். ஐ. சி.சி. ஐ (FICCI) மற்றும் டைலீகல் (Trilegal) நிறுவனத்தின் ’ESG – Into the Mainstream’ என்ற ஆய்வு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைப்பான எஃப்ஐசிசிஐ மற்றும் ட்ரைலீகல் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் 'ESG - இன்டு தி மெயின்ஸ்ட்ரீம்' என்ற அறிக்கையில் பருவநிலை இலக்குகளை அடைவதற்குத் தேவையான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக இந்தியாவுக்கு ஒரு பெரிய அளவிலான பட்ஜெட் ஒதுக்கீடு, இருதரப்பு மற்றும் பலதரப்பு மூலங்களிலிருந்து கிடைக்கும் சர்வதேச நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ். ஆர். முதலீடுகள் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளரான ராஜேஷ் வர்மா வெளியிடப்பட்ட ‘அன்லாக்கிங் கிரீன் ஃபைனான்ஸ்’ என்ற தலைப்பிலான அறிக்கையின் ஒரு பகுதியில், காலநிலை நிதியை அணுகுவதற்கும் வழங்குவதற்கும் இந்தியாவின் தயார் நிலை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சீரான கார்பன் வரிக் கொள்கை மற்றும் கிரீன் டாக்ஸானமி போன்ற பிற தொடர்புடைய அம்சங்கள் ஆகியவற்றை ஆராய்கிறது. இந்தத் திட்டங்களுக்கு ஃப்ஸ்ட் லாஸ் கேப்பிடல், (‘first loss capital’) வழங்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும்,காலநிலை மாற்றங்களுக்கான திட்டங்களுக்கான முதலீடுகளை அதிகரிக்கவும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் அதாவது ஒரு நிறுவனம் இயங்குவதற்கும், அதன் மூலம் நாட்டிற்கு பயனளிக்கும்விதத்தில் செயல்படும் முறைக்காக விதிகளை மறுவரையறை செய்வதில் கவனம் செலுத்துவது, காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பிற்கான திட்டங்களை குறைக்க நிலையான பாதையை வகுப்பது, நிதி அல்லாத அளவீடுகள் மற்றும் காலநிலை அபாயங்களை நிர்வகிப்பதற்கு கார்ப்பரேட்டு நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை பற்றி அறிக்கை விவரிக்கிறது. இதனால் கார்ப்ரேட் நிறுவனங்கள் செயல்படும் முறை மாறக் கூடும்.
கார்ப்ரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். (Corporate social responsibility) நிதி எந்த அளவிற்கு நாட்டின் பருவநிலை சார்ந்த இலக்குகளை அடைய உதவும் என்பது குறித்தும் இந்த அறிக்கை விளக்குகிறது.
இந்த அறிக்கை இந்தியா காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் பற்றி பேசுகிறது.
100 ஏக்கர் நிலம்.. 25 ஆண்டுகள் உழைப்பு.. கட்டாந்தரையை காடாக்கிய தனி ஒருவர்!