மேலும் அறிய

Largest Mobile Manufacturer: இன்னும் சீனா மட்டுமே பாக்கி..! 200 கோடி, செல்போன் தயாரிப்பில் உலகளவில் 2-வது இடம்பிடித்த இந்தியா

உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் உற்பத்தியாளர் எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் உற்பத்தியாளர் எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

செல்போன் உற்பத்தி:

கடந்த 2014-2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களின்,  மொத்த ஏற்றுமதி இரண்டு பில்லியன் அதாவது 200 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் சீனாவிற்கு அடுத்தபடியாக செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டில் 25 கோடி செல்போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 27 கோடியாக உயரும் என சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிடுகிடு உயர்வு:

2014 மற்றும் 2022-க்கு இடையில் செல்போன்களின் உள்ளூர் உற்பத்தி 23 சதவிகிதம் அளவிற்குஉயர்ந்துள்ளது.  உள்ளூரில் தேவை அதிகரிப்பு, டிஜிட்டல் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் மத்திய அரசின் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி ஊக்கத்தொகை போன்ற பல்வேறு காரணங்கள், செல்போன் உற்பத்தியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்ட உந்துகோலாக அமைந்துள்ளன.

Made In India:

2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்திய சந்தையின் ஏற்றுமதியில் 98% க்கும் அதிகமானவை  'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு இந்த ஏற்றுமதி அளவு வெறும் 19 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாக சில ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. கடந்த நிதியாண்டில் இந்தியா தயாரித்த 25 கோடி செல்போன்களில் 20 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவை குறைவதால் 2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டை விட 3% குறைவாக இருந்தது. இருப்பினும், மதிப்பு அடிப்படையில், உற்பத்தியானது ஆண்டுக்கு 34% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் உற்பத்தி:

2022 ஆம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களின் மொத்த எண்ணிக்கையில் 25% ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்ததாகும்.  இது 2021 ஆம் ஆண்டில் வெறும் 12% ஆக இருந்தது. இதனால் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 65 சதவிகிதம் வளர்ந்துள்ளது.  அதே நேரத்தில் உற்பத்தி பொருட்களின் மதிப்பு 162 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ரூ.4.25 லட்சம் கோடி:

இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்துள்ளது. நடப்பாண்டில் ரூ.4 லட்சம் முதல் ரூ.4.25 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்யும் என்றும்  மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கான தரவுகளின் படி, இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகப்படியான செல்போன் உற்பத்தியுடன் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்திலும், அதை விட 1.8 மடங்கு குறைந்த உற்பத்தியுடன்  மூன்றாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக வியட்நாம் உள்ளது. இருப்பினும், ஏற்றுமதியில், சீனா மற்றும் வியட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஏனெனில் வியட்நாமில் செல்போனின் தேவைகள் குறைவாக உள்ளதால், அந்நாட்டின் உற்பத்தியில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget