11 AM Headlines: இலங்கையின் அடுத்த அதிபர் யார்? ஃப்ரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
![11 AM Headlines: இலங்கையின் அடுத்த அதிபர் யார்? ஃப்ரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப் important headlines 22nd september 2024 chennai test pm modi usa know full details here 11 AM Headlines: இலங்கையின் அடுத்த அதிபர் யார்? ஃப்ரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/22/a22c4c2982f372feb465b4dcf72170b01726981907989732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தவெக மாநாடு பணிகள் தீவிரம்
விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணிகளை தவெக தலைவ விஜய் முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே, பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்புக்க் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில குழுக்களை அமைக்க திட்டம்
அதிமுகவில் எனக்கு எதிராக யாரும் இல்லை - எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் எனக்கு எதிராக யாரும் இல்லை. நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள்
ஆரணி அருகே நடந்த சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த சேவூர் அருகே ஆற்காடு - போளூர் பைபாஸ் சாலையில், நேற்றிரவு அடையாளம் | தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. சடலங்களை மீட்ட போலீசார், விபத்து குறித்து விசாரணை
மூதாட்டியிடம் நகை பறிப்பு - புதுமாப்பிள்ளை கைது
மயிலாடுதுறையில் வீட்டின் அருகே நடைபயிற்சி செய்த 67 வயது பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்ட வழக்கில், ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த விஜயபாலன் (26) என்பவர் கைது. ஆன்லைன் செயலிகளில் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ள விஜயபாலன், அதனை அடைக்க நகைபறிப்பில் ஈடுபட்டுள்ளார். 10 நாட்களுக்கு முன்பு காதலித்த பெண்ணையும் இவர் திருமணம் செய்துள்ளார்.
ஃப்ரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல்
பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாலிகாவல் என்ற இடத்தில், குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அது வேறு மாநில பெண் என தெரிய வந்துள்ளது.
பைடனை சந்தித்த பிரதமர் மோடி
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அதிபர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த அதிபர் யார்?
இலங்கையின் 9வது அதிபருக்கான தேர்தலில், அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்க இரண்டாவது இடத்திற்கும், எதிர்க்கட்சி தலைவரான பிரேமதாச மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
5வது இடத்தில் நமல் ராஜ்பக்ச
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நமல் ராஜபக்ச, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமின்றி, அவரது கட்சி வலுவாக திகழ்ந்த பகுதிகளிலும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
வெற்றி முனைப்பில் இந்தியா
இந்திய அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்துள்ளது. வெற்றி பெற இன்னும் 321 ரன்களை சேர்க்க வேண்டி உள்ளதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
போர்ச்சுகலில் ரொனால்டோ உருவம் பொறித்த நாணயம்
கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவ கவுரவிக்கும் வகையில் வரது உருவம் பொறித்த நாணயத்தை போர்ச்சுகல் அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவரது ஜெர்ஸ் எண் ஆன CR7 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)