11 AM Headlines: சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின்..! மகாவிஷ்ணு வாக்குமூலம் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
தமிழ்நாடு உள்பட காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில், வேட்டி சட்டை அணிந்து தமிழ் வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், ”சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்” என குறிப்பிட்டுள்ளார்.
Maha Vishnu: "தவறாக புரிஞ்சுகிட்டாங்க! சித்தர்கள் என்னை வழிநடத்துறாங்க" போலீசிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்
சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைதானர். போலீசார் விசாரணையில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், பல இடங்களில் தான் இவ்வாறே பேசியதாகவும், சித்தர்கள் தன்னை வழிநடத்துவதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
TVK Manadu: தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள முதல் மாநாடு குறித்த தேதியினை, இன்று அக்காட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவிக்க உள்ளார். விழுப்புரம் மாவட்டம் வி-சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்.. மேலும் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலரும், கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளருமான, கோபு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாடு முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மாநகராட்சிகளை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால், அது தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
FDI For States: வெளிநாட்டு முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது எவ்வளவு? இந்தியாவில் முதலிடம் யாருக்கு?
இந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த முதலீடுகளில் 52 சதவிகிதம் மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளது. அதாவது தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வெறும் ரூ.8,325 கோடி முதலீட்டுடன், இந்தியா ஆறாவது இடத்தில் பிடித்துள்ளது.
Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்
ராமநாதபுரத்தில் அரசுப்பேருந்து மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,794 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 19,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
GOAT Box Office Collection: தளபதி மாஸ்..! 3 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த தி கோட் - அப்ப ரூ.200 கோடி? 3வது நாள் வசூல் நிலவரம்
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் சுமார் 215 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று விடுமுறை என்பதால் இன்றும் இந்த படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Paris Paralympic 2024: ஹமாஸ் கொடியால் இந்தியாவுக்கு கிடைத்த 7வது தங்கம் - பதக்க வேட்டையில் வீரர்கள், பாராலிம்பிக் நிலவரம் என்ன?
2024 ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஆண்கள் ஈட்டி எறிதல் - எஃப் 41 இறுதிப் போட்டியில் ஈரானின் சடாகே சாயா பீட் தங்கம் வென்றார். ஆனால், போட்டியின் முடிவில் ஹமாஸ் கொடியை ஏந்தி, வெளிப்படுத்திய செய்கைகள் விதிகளுக்கு புறம்பாக இருந்தது. இதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த போட்டியில் இந்திய வீரர் நவ்தீப் சிங் வென்ற வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்த்தப்பட்டது.