11 AM Headlines: பிரதமர் பதவிக்கு போட்டியா? வாகன இறக்குமதிக்கான தடை ரத்து - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: தமிழ்நாடு உள்பட காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்:
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க&கண்காணிக்க 3 ரோமிங் குழுக்கள் அமைப்பு
சென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில், கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மற்றும் கண்காணிக்க 3 ரோமிங் குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. மாநகராட்சி முழுவதும் இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காரைக்குடியில் டிடிவி தினகரன் பேட்டி
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "மக்களவை தேர்தலின் போது கடைசிவரை பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்ந்தார்கள். கூட்டணியில் இருப்பதற்காக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் எனக் கூறுகின்றனர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக்குறிதான்" - என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாக உள்ள 30 தமிழர்கள்
உத்தராகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்களாவர். அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன்: நிதின் கட்காரி
”என்னுடைய வாழ்வில் பிரதமராவது என்பது என்னுடைய நோக்கம் இல்லை. என்னுடைய மனஉறுதி மற்றும் என்னுடைய அமைப்புக்கு நான் விசுவாசத்துடன் இருக்கிறேன். எந்தவொரு பதவிக்காகவும் நான் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. ஏனெனில், என்னுடைய மனவுறுதியே எனக்கு முக்கியம்” என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில் பழச்சாறு கடை உரிமையாளருக்கு சரவெடி
காசியாபாத்தில் அமீர்(29) என்பவரது பழச்சாறு கடையில் நடதிய சோதனையின்போது ஒரு கேன் முழுவதும் சிறுநீர் நிரப்பப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அமீரை கைது செய்தனர். கடையில் இருந்த 15வயது சிறுவனையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர் முன்னதாக பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர்
.4 ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கிய இலங்கை
முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றிய ரஷ்யா
மாஸ்கோவில் இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் 6 பேரின் அங்கீகாரத்தை ரஷ்ய அரசு ரத்து செய்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் உளவு பார்த்தல் மற்றும் நாசவேலையின் அறிகுறிகளை காட்டுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் உக்ரைனுக்கு கூடுதல் உதவி செய்வதாக அறிவித்த இரண்டு நாட்களுக்கு பின் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐபிஎல் 2025 - வீரர்களை தக்கவைக்க விதிமுறைகள் என்னென்ன?
அடுத்த ஐ.பி.எல். தொடரில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட, குறைந்தது 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை ஆகலாம் என தகவல். வரும் டிசம்பரில் வீரர்கள் ஏலம் நடக்க உள்ள நிலையில், விதிமுறைகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா:
டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். 1 செ.மீ தூரம் அதிகமாக வீசிய க்ரெனாடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.87 மீ) முதலிடம் பிடித்து அசத்தல்