ABP Ideas of India 3.0 LIVE: இந்து மதத்தில் இருந்தே இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்க வேண்டும் - சசி தரூர்
Ideas Of India 3.0 Live: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியின் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
LIVE
![ABP Ideas of India 3.0 LIVE: இந்து மதத்தில் இருந்தே இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்க வேண்டும் - சசி தரூர் ABP Ideas of India 3.0 LIVE: இந்து மதத்தில் இருந்தே இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்க வேண்டும் - சசி தரூர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/a48a88209ffc34fec9b5e24ed390ece61708666405925732_original.jpg)
Background
ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
ஏபிபி-யின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" :
ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.
”மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான நிகழ்வு”
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் - அதிதேப் சர்கார்:
இவரை அடுத்து பேசிய ஏபிபி நெட்வர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஆன்மீகம் மற்றும் கருப்பொருள்களின் இணைவு உச்சத்தை எட்டியது. ராமர் 'பாரதத்தின் அடித்தளம்' என்று பிரதமர் கூறினார். விவான் மர்வா மில்லினியல்ஸ் புத்தகம், 2019 இல் நரேந்திர மோடியின் அமோக வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. போதிய வேலை உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்குகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தைரியமான தீர்க்கமான தலைமையை கோருகின்றனர். இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் தலைவர், அதிக வேலை வாய்ப்புகளை மனிதாபிமானத்துடன் எவ்வாறு உருவாக்குவது என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
”2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா”
மஹிந்திரா குரூப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிஷ் ஷா பேசுகையில், “இந்தியாவிற்கான எனது ஆலோசனை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். பொருளாதார வளர்ச்சியானது சமூகத்திற்கு நல்லது செய்வதோடு சமநிலையில் இருக்க வேண்டும். வளர்ச்சி அனைத்துப் பிரிவுகளிலும் பகிரப்பட வேண்டும். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரத் பார்வை தைரியமானது. அதன்படி, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதாவது 23 ஆண்டுகளில் உற்பத்தி 16 மடங்கு வளர வேண்டும். ஏற்றுமதி 11 மடங்கு வளர வேண்டும். பட்ஜெட் அரசியலை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்ததை நாங்கள் பார்த்தோம். இது மூலதன செலவினங்களுக்கு அதிக முதலீடு மற்றும் நிதி ஒழுங்குமுறைக்கான பல வழிமுறைகள் மூலம் நீண்ட கால வளர்ச்சியை அமைத்து வருகிறது. உள்ளூர் உற்பத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பண்ணை செழிப்பு மற்றும் அடுத்த தலைமுறைக்கான நிலைத்தன்மை ஆகியவை நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியமானவை” என பேசியுள்ளார்.
அடுத்து நடைபெற உள்ள விவாதங்கள்:
சுயெல்லா பிரேவர்மேன், எம்.பி., சசி தரூர், இந்திய - அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி, சிற்ப கலைஞர் சுபோத் குப்தா, சப்யசாசி நிறுவனர் சப்யசாசி, அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர் சுனில் கில்னானி, நடிகை கரீனா கபூர் கான், நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.
எந்த நாடும் உற்பத்தி செயல்பாடுகள் இல்லையெனில் வளர முடியாது : அரவிந்த் பனாக்ரியா
எந்த நாடும் உற்பத்தி செயல்பாடுகள் இல்லையெனில் வளர முடியாது. சேவைகளை கொண்டு மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் என்பது அர்த்தமற்ற பேச்சு : அரவிந்த் பனாக்ரியா
ABP Ideas of India 3.0 LIVE : 370 சட்டப்பிரிவு ரத்து குறித்து பேசிய உமர் அப்துல்லா
ABP Ideas of India 3.0 LIVE
370 சட்டப்பிரிவு ரத்து குறித்து பேசிய உமர் அப்துல்லா
அப்போதைய ஆளுநர் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என கூறியதாகப் பேசிய உமர் அப்துல்லா, அப்படியான விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார்
ABP Ideas of India 3.0 LIVE: ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் நாள் மாநாடு நிறைவு
ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் நாள் மாநாடு நிறைவு பெற்றது. மீண்டும் நாளை தொடங்கும்
”யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என, என் அம்மா கூறியிருக்கிறார்” - அமீர் கான் உருக்கம்
யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என, என் அம்மா கூறியிருக்கிறார், தெரியாமல் கூட யாரையும் சிரமப்படுத்தியிருந்தால் , உடனே மன்னிப்பு கேட்பேன் என அமீர்கான் உருக்கமாக தெரிவித்தார்.
ABP Ideas of India 3.0 LIVE: கதைகளில் சமூகப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன்- அமீர்கான்
"சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். எனது கதைகளில் முக்கியமான சமூகப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்று நான் எப்போதும் கேட்டுக்கொள்வேன் என அமீர்கான் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)