மேலும் அறிய

7 AM Headlines Today: தொடங்கியது கார்த்திகை தீபத்திருவிழா... மெரினாவில் சிறப்பு நடைபாதை.. இன்னும் பல செய்திகள்!

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ரூ.20 கோடியில் 13,000 பள்ளிகளில் “வானவில் மன்றம்” முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  • 2ம் நிலை காவலர்களுக்கான 3,552 பணிக்கான தேர்வு: தமிழகம் முழுவதும் 2.99 லட்சம் பேர் எழுதினர்
  • பாஜகவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வத்துக்கு திமுகவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • மானாவாரி நிலங்களில் வேப்பமரங்களை அதிகம் வளர்க்க வேண்டும் என காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வேண்டுகோள் 
  • கடலை அருகில் இருந்து ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் சிறப்பு நடைபாதை; உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை செய்யவேண்டியதில்லை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா:

  • அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்; நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதான் தாக்கலாகிறது.
  • ஜி20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு : பிரதமர் மோடி பேச்சு
  • சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் : 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள் 
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 பிரிவு 12 இன் கீழ் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்துவது பிணையில் வெளியே வர முடியாத மிக தீவிரமான குற்றச் செயல் ஆகும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி ஆசிரியர் ராஸ்விஹாரி மணியார் தனது 94வது வயதில் காலமானார். 
  • சாதாரண காய்ச்சலுக்கு ஆன்ட்டிபயாடிக் பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. 
  • தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகம்:

  • ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக 40 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் மசூத் செத்தாயிஷ் கூறியுள்ளார்.
  • ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 420-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலான் மஸ்க் பதிலளித்தார்.
  • மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் பலவற்றிலும் ஆண் உயிரணுக்கள் ஆரோக்கியம் வெகுவாகக் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 
  • அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டை குழந்தைகள்  பிறந்துள்ளது.

விளையாட்டு:

  • குரோஷியாவுக்கு எதிரான ஆட்டம் தொடங்கிய 67ஆவது விநாடியில் கனடா வீரர் அல்போன்ஸ் டேவிஸ் கோல் அடித்தார். இதுதான் நடப்பு உலகக் கோப்பையில் மிக விரைவாக அடிக்கப்பட்ட கோலாகும்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். 
  • குரூப் இ பிரிவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
  • உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது
  • உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கனடா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget