மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 26.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்...!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி
- பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்
- பொறியியல் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 7-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
- பிரதமர் மோடியுடன் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு
- முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு
- லாட்டரி சீட்டு பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது கட்டுக்கதை – தமிழக நிதியமைச்சர்
- கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்களை பெறாதவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பு – 31-ந் தேதிக்குள் மீண்டும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு
- மே 10-ந் தேதிக்கு பிறகு புதிய குடும்ப அட்டைகளை பெற்றவர்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ரேசன் பொருட்கள் – தமிழக அரசு
- கோவை பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியது – 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
- கர்நாடகாவில் தொடர் கனமழை – கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74 அடியாக உயர்வு – அணைக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக உயர்வு
- மாமல்லபுரத்தில் கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
- தமிழ்நாட்டில் புதியதாக 1808 பேருக்கு கொரோனா தொற்று.
- கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் 22 பேர் உயிரிழப்பு
- தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ருத்ரேஸ்வரா கோயிலை புராதணச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ
- மகாராஷ்டிராவில் தொடர் கனமழை : சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது
- மாநிலங்களின் கையிருப்பில் 3.29 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உள்ளது – மத்திய அரசு
- இந்தியா முழுவதும் 45 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது
- தொடர் மழை: விரைவில் நிரம்புகிறது முல்லைப் பெரியாறு அணை – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- கார்கில் போர் 22வது வெற்றி தின கொண்டாட்டம் : உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று அஞ்சலி
- பா.ஜ.க.விற்கு எதிராக மாபெரும் கூட்டணி : மேற்குவங்க தலைவர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார்
- இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி
- ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியீடு : செப்டம்பர் மாதத்தில் மீண்டும் தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion