மேலும் அறிய

Harassment charges on kalakshetra: கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல் உண்மையா? வதந்தியா? விசாரணையை தொடங்கிய சென்னை போலீஸ்

கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும், அவை அனைத்தும் வதந்தி எனவும் இருதரப்பிலும் புகார்கள் வந்துள்ளதாகவும், உண்மையை அறியும் வகையில், விசாரணையை சென்னை போலீஸ் தொடங்கியுள்ளது.

கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில், அவை அனைத்தும் வதந்தி என்றும் புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில் உண்மையை கண்டறிவதற்கு, சென்னைப் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ஏபிபி நாடு-விடம் தெரிவித்துள்ளார். 

சென்னை கலாஷேத்ரா:

சென்னை, திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா அமைப்பில் உலகின் பல இடங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து தங்கி பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகின்றனர். 1936-இல்  நிறுவப்பட்ட கலாக்ஷேத்ரா, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை சேர்ந்த பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு. இதனால், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆசிரியர் மீது குற்றச்சாட்டு:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாஷேத்ராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களை பெற வேண்டுமானால், தனது விருப்புங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஒருவருக்கு வாய்ப்பை வழங்கவும், தடுக்கவும் முடியும் அளவிற்கு அந்த ஆசிரியருக்கு கலாஷேத்ராவில் அதிகாரம் உள்ளதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல்கள் பரவுகின்றன. அங்குள்ளோரை தொடர்புக் கொண்ட போது, தங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும் என்ற பயத்தில் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு, மாணவிகள் மறுத்துவிட்டனர்.

கலாஷேத்ரா நிர்வாகம் மீது குற்றச்சாட்டு:

பாலியல் தொல்லை கொடுத்தஆசிரியர் மீது, மாணவிகள் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் தடை விதித்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கேர்ஸ்பேசஸ் மூலம் புகார்:

மாணவிகள் எந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தனரோ அந்த நபர், சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகுதான், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னா மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகாரளித்தது.

தேசிய மகளிர் ஆணையம் புகார்:

”கேர்ஸ்பேசஸ்” அமைப்பு வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.  

போலீசார் உறுதி:

”தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி உள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும்” தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு இரு தரப்பிலும் புகார்கள் வந்துள்ளதாகவும், உண்மையை கண்டறியும் வகையில், அப்பகுதி போலீசார் விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கலாஷேத்ரா விளக்கம்:

இந்நிலையில் பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா அமைப்பு சார்பில், பத்திரிகை தகவல் பணியகம் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் புகார் விசாரணைக் குழு மூலமாக கடந்த இரண்டரை மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த மாணவியும் வாக்குமூலம் அளிக்கவில்லை. தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே வதந்திகள் மட்டுமே. தேவைப்பட்டால் தேசிய மகளிர் ஆணையம் நேரில் வந்து விசாரணையை மேற்கொள்ளலாம்” எனவும் கலாஷேத்ரா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது உள் புகார் விசாரணைக் குழு அமைப்பின் அறிக்கையை, டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கலாஷேத்ரா தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்தியராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்தியராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
Thiruparankundram: திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Election Exit Poll | அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் AAP, காங்கிரஸ் ! வெளியான EXIT POLL | BJPRahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்தியராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்தியராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
Thiruparankundram: திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு? களம் யாருக்கு சாதகம்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு? களம் யாருக்கு சாதகம்?
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
"மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க" கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!
Embed widget