ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம்: குஜராத் கின்னஸ் சாதனை
51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூர்ய நமஸ்காரம் செய்துள்ளனர்
4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து, குஜராத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வில் முதல்வர் பூபேந்திர பாகல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோதரா சூரியக் காலையில் புத்தாண்டு காலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
#WATCH | Mehsana: Gujarat CM Bhupendra Patel and Home Minister Harsh Sanghavi participate in the Suryanamaskar Program at Modhera Sun Temple, on the first morning of the year 2024. pic.twitter.com/t3z3iBBIuk
— ANI (@ANI) January 1, 2024
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறும்போது, நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை.
மோதராவில் நடைபெற்ற சூர்ய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளனர். 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூர்ய நமஸ்காரம் செய்துள்ளனர் என்று கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் தெரிவித்தார்.
#WATCH | Mehsana: Gujarat CM Bhupendra Patel and Home Minister Harsh Sanghavi participate in the Suryanamaskar Program at Modhera Sun Temple, on the first morning of the year 2024. pic.twitter.com/t3z3iBBIuk
— ANI (@ANI) January 1, 2024
குஜராத் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, இன்று குஜராத் நாட்டிலேயே முதல் உலக சாதனை படைத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக யோகாவில் குஜராத் மாநிலம் கின்னஸ் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.