Viral Video: இளம் பெண்ணுடன் சிக்கிய முன்னாள் அமைச்சர்! வெளுத்து வாங்கிய மனைவி! வைரல் வீடியோ!!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் இளம் பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக பரத்சின் சோலாங்கி இருந்து வருகிறார். இவர் நேற்று ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுடன் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்தச் சமயத்தில் இவருடைய மனைவி அவரை வந்து பார்த்து அடிக்கும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
பரத்சின் சோலாங்கி ஒரு இளம் பெண்ணுடன் இருப்பதை அறிந்த அவருடைய மனைவி சில நபர்களுடன் அந்த அறைக்குள் நுழைந்துள்ளார். அதன்பின்னர் அவர் அந்த இளம் பெண் மற்றும் பரத்சின் சோலாங்கி ஆகியோரை தாக்கியுள்ளார். மேலும் உன்னுடைய தந்தை வயதில் இருக்கும் இவருடன் எப்படி இங்கே இருக்கிறாய் என அந்த இளம்பெண்ணிடம் கேள்வி எழுப்புகிறார்
गुजरात कांग्रेस नेता भरत सिंह सोलंकी को जब पत्नी ने रंगे हाथों दूसरी लड़की के साथ पकड़ लिया #BharatsinhSolanki pic.twitter.com/pQRRHFEypc
— Lutyens Watch (@LutyensWatch) June 1, 2022
குஜராத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரத்சின் சோலாங்கி மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அத்துடன் அவர் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அவருடைய மனைவி ரேஷ்மா பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஹர்திக் பட்டேல் அக்கட்சியிலிருந்து விலகியிருந்தார். அவர் நேற்று பாஜகவில் இணைந்தார். மேலும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் பாஜகவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 1995ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இடையில் ஒரு 18 மாதங்களுக்கு மட்டும் அங்கு ஜனாதிபதி ஆட்சி இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்