சாமானியனுக்கும் நீதி.. மக்கள் நீதிமன்றங்கள் அசத்துதே.. 4 ஆண்டுகளில் 3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு!
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 313 கிராம நீதிமன்றங்கள் மூலம் நான்கு ஆண்டுகளில் 2.99 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் 688 மாவட்ட நீதிமன்றங்கள் இயங்குகின்றன. கிராம நீதிச்சட்டம் 2008-ன்படி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கிராமப்புற நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
4 வருடங்களில் 3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு:
கடந்த 2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வரை, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 313 கிராம நீதிமன்றங்கள் மூலம் டிசம்பர் 2020 முதல் அக்டோபர் 2024 வரை 2.99 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
மேலும், சட்டச் சேவை நிறுவனங்களால் ஏற்பாடு செய்துள்ள மக்கள் நீதிமன்றங்கள் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வழக்குக்கு முந்தைய நிலையில் உள்ள தகராறுகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மட்டுமே மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்து பைசல் செய்து வருகிறது. மக்கள் நீதிமன்றங்கள் நிரந்தர அமைப்பாக இல்லாத நிலையில், அனைத்து தீர்வு காணப்படாத வழக்குகளும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது.
மத்திய அரசு சொன்ன தகவல்:
எனவே, மக்கள் நீதிமன்றங்களில் எந்த வழக்குகளும் நிலுவையில் இருப்பதில்லை. கடந்த 2024-25ஆம் ஆண்டில் 5944-ல் மாநில மக்கள் நீதிமன்ற அமர்வுகள் அமைக்கப்பட்டு 10,11,912 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும், 98,776 வழக்குகளுக்கு 17,309 நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வுகள் மூலம் இதே காலகட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024-25-ம் ஆண்டில் தேசிய சட்டச் சேவை ஆணையத்திற்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இந்த நிதி மாநில சட்டச் சேவை ஆணையத்தின் மூலம் அமல்படுத்தப்படும். சட்டச் சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Lok Adalats
— PIB India (@PIB_India) November 29, 2024
As on October 2024, 313 Gram Nyayalayas are functioning across the country which have disposed of more than 2.99 lakh cases during December 2024
Details: https://t.co/xrlmR0tssA #ParliamentQuestion @MLJ_GoI pic.twitter.com/vrNM2lNFsz
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ