மேலும் அறிய

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | Vijay

திமுகவை தொடர்ந்து விமர்சித்த ஆதவ் அர்ஜூனா-ஐ விசிகவில் இருந்து திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் ஆதவ் தனக்கு தவெக கட்சியில் துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

புத்தக வெளியீட்டு விழாவை வைத்து அரசியல் களத்தையே புரட்டி போட்டுள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. விஜய்யை மேடையில் வைத்துக் கொண்டே முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்வதாகவே ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு இருந்தது. திமுகவிற்கு எதிரான கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதை முன்பே கிரகித்த திருமாவளவன், அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டார். 

இந்நிலையில் அம்பேத்கரை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி என்ற பெயரில், பெயரளவில் அம்பேத்கரை தொட்டுவிட்டு விஜய்யும், ஆதவ் அர்ஜூனாவும் அரசியல் பேசியதை கண்டு ஆதங்பட்டுலார். திமுகவிற்கு எதிராக சில கருத்துக்கள் இருக்கலாம் என்பதை கணித்தாலும், தன்னுடைய 24 நிமிட பேச்சில் ஆதவ் அர்ஜூனா வெறும் 10 நிமிடங்கள் மட்டும் அம்பேத்கரை பற்றி பேசிவிட்டு மொத்தமாக திமுகவை அட்டாக் செய்ததை பார்த்து திருமா பொறுமி தள்ளியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் விசிக முக்கிய புள்ளிகள் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆதவ் கட்சிக்குள் வந்தவுடன் மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கலாமா, சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க பார்க்கிறார், அவர் சொல்வதை கேட்டுதான் கட்சி செயல்படுகிறது என திருமாவளவன் காதுகளுக்கு அடிக்கடி புகார் சென்று வந்துள்ளது. ஆனால் திருமா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆதவ் அர்ஜூனாவை கூடவே வைத்திருந்ததால் விசிக சீனியர்களும் அதிருப்தியில் இருந்ததாக பேச்சு இருந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திமுகவினர் கருதி, அவருக்கு எதிராக திருமா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இந்தநிலையில் விரைவில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியோ அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டோ விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் ஆதவ்-ஐ தற்காலிக இடைநீக்கம் செய்து திருமாவளவன் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியுள்ளார்.

தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று சேர ஆதவ் அர்ஜூனா முடிவு செய்திருப்பதாகவும், அந்த கட்சியில் தனக்கு துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக  வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

3 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை! பயணிகள் உற்சாகம்
3 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை! பயணிகள் உற்சாகம்
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
பள்ளிகளுக்கு அனுப்பவே பயமாக இருக்கு! தொடரும் மரணங்களால் பெற்றோர்கள் கடும் அச்சம்!
பள்ளிகளுக்கு அனுப்பவே பயமாக இருக்கு! தொடரும் மரணங்களால் பெற்றோர்கள் கடும் அச்சம்!
TVK Ramesh: கோயில் நிலம் ஆக்கிரமிப்பா? நடவடிக்கை எடுக்க நாங்க ரெடி - அமைச்சர் ரமேஷ் அசத்தல் அறிவிப்பு
TVK Ramesh: கோயில் நிலம் ஆக்கிரமிப்பா? நடவடிக்கை எடுக்க நாங்க ரெடி - அமைச்சர் ரமேஷ் அசத்தல் அறிவிப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Kolathur MLA V S Babu : வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Embed widget