'மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 

கொரோனா பேரிழப்பில் இருந்து நம்மையும் நம் சுற்றத்தையும் காக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் https://www.cowin.gov.in/home  என்ற இணையதளத்திலோ அல்லது  ஆரோக்கிய சேது ( Arogya Setu app) செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து தடுப்பூசியை பெறலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள சுகாதார மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ தடுப்பூசியை நேரடியாக சென்று பெறலாம். மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

தற்போது கிராமங்களில் ஊராட்சி மூலமாகவும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு அந்த வயதினர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். 
இந்நிலையில்  தடுப்பூசி தொடர்பாக கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட்டரின் பதிலளித்துள்ளார்.  • அடிக்கடி மது அருந்துபவர்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா?

ஆம் என்பது தான் பதில்.  • அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? 

பிரியாணி உள்ளிட்ட உங்களுக்கு பிடித்த எந்த உணவையும் கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் சாப்பிடலாம். • இதற்கு முன்னதாக அம்மை, தோல் ஒவ்வாமை, ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, இதய பிரச்னை இருந்தால் தடுப்பூசி போடலாமா?

கண்டிப்பாக போடலாம் • பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

மே மாதம் வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பின்படி பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தேசிய வல்லுநர்கள் குழு பரிந்துரையின்படி தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான புதிய நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.  • கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது. அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. 

 • முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்! • வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பிக்கு பின்பு நெகட்டிவ் பெற்றவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.

 • பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

 • கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

 • கர்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முடிவு குறித்து வல்லுநர்கள் குழு பரிசீலித்து வருகிறது.
அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!
 
Tags: Vaccination COVID-19 Vaccination Vaccination corona corona Vaccination Vaccination question

தொடர்புடைய செய்திகள்

PM Modi G7 Speech: சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் : ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை..!

PM Modi G7 Speech: சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் : ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை..!

”ஒவ்வொரு நாளும் 150 பரோட்டோ போட்டுடுவேன்” - பெருங்கனவுகளுடன் சட்டக்கல்லூரி மாணவி அனஸ்வரா ஹரி!

”ஒவ்வொரு நாளும் 150 பரோட்டோ போட்டுடுவேன்” - பெருங்கனவுகளுடன் சட்டக்கல்லூரி மாணவி அனஸ்வரா ஹரி!

Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!

Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி - முதல்வர் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி - முதல்வர் அறிவிப்பு

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!