Evening Headlines: தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்...தோனியை புகழ்ந்த ரவி சாஸ்திரி...இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 27: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்பு
* அரியலூர் மாணவி தற்கொலை; மதமாற்ற முயற்சி என்பதை ஏற்க முடியாது - பீட்டர் அல்போன்ஸ்
* அரியலூர் மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசான்
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டி - டிடிவி தினகரன்
* பொங்கல் பரிசுகள் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
* நகர்ப்புற தேர்தலுக்கு தயாராகும் விஜய் மக்கள் இயக்கம். விஜய் படம், கொடி பயன்படுத்த அனுமதி.
* தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஊழியர்கள் எழுந்த நிற்காததற்கு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் - மாநில தேர்தல் ஆணையம்
இந்தியா:
* 2023 ஜனவரி 1 இல் 15 வயது நிரம்புவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் - புதிய வழிகாட்டுதல் வெளியீடு
* முறைப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பு டாடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்திப்பு
* கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி
உலகம்:
* சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் மீது காப்புரிமை விதி மீறல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* ஒமிக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாகவும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேலாகவும் உயிர்வாழும் - ஆய்வில் தகவல்
விளையாட்டு:
* “தோனியைப் போல ஒருவரைப் பார்த்தது இல்லை; அவர் போன் நெம்பர் கூட என்னிடம் இல்லை” - ரவி சாஸ்திரி
* கிரிக்கெட் குறித்த கூர்மையான புத்தி கொண்டவர்களில் தோனியும் ஒருவர் ஆவார் - கிரேக் சாப்பல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்