Evening Headlines | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு...பிரபல நடிகருக்கு 2வது முறை கொரோனா...இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 26: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* 73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்என் ரவி
* டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் கம்பீர அணிவகுப்பு
* ஆன்லைன் கதர் ஆடை பிஸினஸை குடியரசுத் தினமான இன்று தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். தன்னுடைய ஆடை விற்பனை இணையப்பக்கத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
* 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழக வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு
* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
* நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு இபிஎஸ்-யிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை
* தமிழ்நாட்டில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அரசு அனுமதி
இந்தியா:
* 73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
* வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு (தெலுங்கானா, புதுச்சேரி) மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்
* தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
* குடியரசு தினத்தை ஒட்டி சர்வதேச எல்லைகளில் பாகிஸ்தான் படை வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
உலகம்:
* உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் - அதிபர் ஜோ பைடன்
* கொலம்பியாவில் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கும் வீடு ஒன்று கொரோனா தொற்றுக் கால விதிமுறைகளுக்கு உட்பட்டு பொழுது போக்க விரும்புபவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
* WHO தலைவராக மீண்டும் டெட்ரோஸ் அதோனோம்? டிவிட்டர் வாயிலாக நாமினேட் செய்த உலக சுகாதார நிறுவனம்!
விளையாட்டு:
* இந்திய குடியரசு தினம்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து அனுப்பிய பிரதமர் மோடி!
* முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சக கிரிக்கெட் வீரர்களும் நெட்டிசன்களும் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
* நாட்டின் 73ஆவது குடியரசுத் தினத்திற்கு இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்