மேலும் அறிய
Advertisement
News Wrap : குரூப் தேர்வுகள் அறிவிப்பு, பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை..நாளை ஆஷஸ் டெஸ்ட்..! இன்றைய முக்கியச் செய்திகள்!
மாலை 6 மணியளவிலான இன்றைய முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் பற்றிய அறிவிப்பாணை 2022 பிப்ரவரி மாதம் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்படும் – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
- விழுப்புரத்தில் 80 வயதான தாயும், அவரது 60 வயதான மகளும் அடித்துக்கொலை – நகைகள் கொள்ளை
- வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த 9 நபர்களுக்கு கொரோனா
- தடுப்பூசி செலுத்தாமல் போலி சான்றிதழ் வழங்கினால் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை
- மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கடலூர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
இந்தியா :
- ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
- 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு
- கொரோனா மூன்றாவது அலையால் பீதியடையத் தேவையில்லை – சுகாதாரத்துறை நிபுணர்கள் கருத்து
- கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாகவும், சிறுவர்களுக்கான தடுப்பூசி தொடர்பாகவும் நிபுணர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து
- பீகார் மாநிலத்தில் போலி தடுப்பூசி செலுத்தியோர் பட்டியல் – பட்டியலில் மோடி, சோனியாகாந்தி, பாலிவுட் நடிகர்கள் பெயரும் இடம்பிடித்ததால் அதிர்ச்சி
- பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளி மீது தாக்குதல்
உலகம் :
- கென்யா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது – திருமணத்திற்கு சென்று திரும்பிய 30ககும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- சிரியா நாட்டின் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
- அமெரிக்காவில் ஒரே நிமிடத்தில் 900 பேரை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம் – ஜூம் செயலி தலைமை அதிகாரி அறிவிப்பால் அதிர்ச்சி
- மியான்மரின் தலைவர் ஆங் சான் சூ கி-யின் தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு
- பியர்ல் ஹார்பர் 80ம் ஆண்டு நினைவு தினம் : அமெரிக்க கடற்படையினர் அஞ்சலி
விளையாட்டு :
- இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதும் தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
- புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை தொடக்கம்
- ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் முதல் ஆஷஸ் டெஸ்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- கிறிஸ்ட்சர்ச் மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion