Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!
இந்திய பெருங்கடலில் காலை 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
EQ of M: 6.4, On: 10/07/2024 10:25:45 IST, Lat: 53.18 S, Long: 25.68 E, Depth: 10 Km, Location: Indian Ocean.
— National Center for Seismology (@NCS_Earthquake) July 10, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/Vx7ijUnU2Q
மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டராக இது பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் 3.5 ரிக்டர் அளவில் சமோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் படிக்க: Accident: காலையிலே சோகம்! பேருந்தும், லாரியும் மோதியதில் 18 பேர் மரணம் - வேதனையில் ஆக்ரா
மேலும் படிக்க: கணவன்களுக்கு கல்தா! காதலர்களுடன் எஸ்கேப்! பிரதமரின் வீடு கட்டும் நிதியில் 11 பெண்கள் செய்த காரியம்