![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Drug case: போதை பவுடர் சர்க்கரை பவுடர் ஆக வேண்டுமா.. பாஜகவில் இணையுங்கள் ஷாரூக் - அமைச்சரின் ஐடியா
மும்பை: நடிகர் ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் போதை பவுடர் சர்க்கரை பவுடராக மாறிவிடும் என மகாராஷ்டிரா அமைச்சர் சகன் புஜ்வால் கூறியுள்ளார்.
![Drug case: போதை பவுடர் சர்க்கரை பவுடர் ஆக வேண்டுமா.. பாஜகவில் இணையுங்கள் ஷாரூக் - அமைச்சரின் ஐடியா Drug Powder to become Sugar Powder If Shah Rukh Khan Joins BJP says Maharashtra minister chhagan bhujbal Drug case: போதை பவுடர் சர்க்கரை பவுடர் ஆக வேண்டுமா.. பாஜகவில் இணையுங்கள் ஷாரூக் - அமைச்சரின் ஐடியா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/24/b5133c26e13964aaff45994dda956f70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவாவை சேர்ந்த கப்பல் ஒன்றில் போதை பொருள் விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து அந்தக் கப்பலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, போதை விருந்து நடப்பது உறுதியானது. இதனையடுத்து கப்பலில் இருந்த நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை அவர்கள் கைது செய்தனர்.
அவரது செல்ஃபோனை ஆராய்ந்ததில் அவருக்கு போதை பொருள் விநியோகஸ்தர்களிடம் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தனக்கு ஜாமீன் வேண்டுமென இரண்டு முறை ஆர்யன் கான் மனுத்தாக்கல் செய்தும் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே, சில நாள்களுக்கு நடிகர் ஷாரூக் கான், சிறையில் இருக்கும் ஆர்யன் கானை நேரில் சந்தித்து ஏறத்தாழ 20 நிமிடங்கள்வரை பேசினார். அப்போது அவருக்கு ஷாரூக் தைரியமும், ஆறுதலும் அளித்ததாக கூறப்படுகிறது.
ஷாரூக் கான் தனது மகனை காலையில் சந்தித்த சூழலில் அன்றைய தினம் பிற்பகலே அவரது வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியது மேலும் பரபரப்பை கூட்டியது. மேலும், ஆர்யன் கான் திட்டமிட்டே சிக்க வைக்கப்படுகிறார் அதற்கான சாட்சிதான் ஷாரூக் வீட்டில் நடந்த சோதனை எனவும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில உணவுத்துறை அமைச்சர் சகன் புஜ்பால் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஷாரூக் கான் மகன் கைது, ஷாரூக் வீட்டில் சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆர்யன் கான் மீது பதியப்பட்ட வழக்கு புனையப்பட்டது. ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் இந்த போதை பவுடர் வழக்கெல்லாம் சர்க்கரை பவுடராக உடனடியாக மாறிவிடும்” என பதிலளித்தார்.
தன்னால் காலூன்ற முடியாத மாநிலங்களில் பாஜக பல தகிடுதத்தங்களை ஆடும். அந்த தகிடுதத்தங்களில் ஒன்றுதான் ஆர்யன் கான் மீதான வழக்கு. அதுமட்டுமின்றி, பாஜகவுக்கு ஷாரூக் கான் என்ற பெயர்தான் பிரச்னையாக இருக்கும். அதனால்தான் அவர் மகனுக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறது என பலர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கோவை : ”உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால்..” : அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)