Delhi Heavy Rain: டெல்லியில் வரலாறு காணாத மழை..! ஒரு நாள் மழைக்கே ஸ்தம்பித்த தலைநகரம்..! கடும் அவதியில் மக்கள்
Delhi Heavy Rain: புது டெல்லியில் மழை நாளை முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்றும் நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் மாதம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது மழைக்காலம். புது டெல்லி கனமழையை சந்திப்பது இது ஒன்றும் புதிதல்ல, ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நகரில் அதிகபட்ச கனமழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The water has receded considerably from the road despite lite rains in the night. It is still cloudy in the morning and the #delhirain can resume any time.#DelhiRains pic.twitter.com/1mXuDOWofv
— Bobins Abraham Vayalil (@BobinsAbraham) October 9, 2022
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் டெல்லியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 8:30 மணியில் இருந்து இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்லி வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தார்ஹங், லோதி சாலை, அயாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையே 74.3மிமீ, 87.2 மிமீ, 85.2 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
நகரின் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை:
தென் - கிழக்கு டெல்லி, டெல்லியின் தென் பகுதிகளான பானிபட், சொஹானா, ஷாம்லி, முஷாஃபர் நகர், சந்த்பூர், ராம்பூர், மதுரா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
09/10/2022: 08:45 IST; Light to moderate intensity rain would occur over and adjoining areas of isolated places of Delhi and NCR (Hindon AF Station, Ghaziabad, Indirapuram, Chhapraula, Noida, Dadri, Greater Noida, Faridabad, Ballabhgarh) Hodal (Haryana) Modinagar, Amroha,
— RWFC New Delhi (@RWFC_ND) October 9, 2022
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 43.9 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. நாளையும் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை நாளை முதல் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்ததால் டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Light to moderate intensity rain would occur over and adjoining areas of the entire Delhi and NCR (Loni Dehat, Hindon AF Station, Ghaziabad, Indirapuram, Chhapraula, Noida, Dadri, Greater Noida, Gurugram, Faridabad, Manesar, Ballabhgarh)... during next 2 hours: IMD pic.twitter.com/Fiqaj46FGf
— ANI (@ANI) October 8, 2022
சஃப்தார்ஹங் பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாளில் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் இப்பகுதியில் 74 மிமி மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சமூக வலைதள கருத்துகள்:
புது டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது குறித்து அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளும், மழைக்காலத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
In delhi water is overflow due to heavy rain#DelhiRains pic.twitter.com/OK4olWOpg7
— Niyamat (@Niyamatreza123) October 8, 2022
மேலும், ஒரு வீடியோவில், மேம்பாலத்தில் இருந்து நீர் கொட்டுகிறது; இந்த வீடியோவை, ’ இலவச கார் வாஷ்’ என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Free car wash in delhi during rain. Thank you kejriwal sir#delhirainpic.twitter.com/YlKpyOAnar
— Nikhil thakur (@Nikhil__thakur2) October 8, 2022
புது டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள குர்காம், நொய்டா, உத்தரபிரதேசம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.