Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Cyclone Remal Effects: மேற்கு வங்கத்தில் இன்று அதிகாலையில் கரையை கடந்த ரெமல் புயலானது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வீசிய கடுமையான ரெமல் புயல் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கரையை கடந்த புயல்:
ரெமல் புயலானது, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியதாகவும், திங்கள் கிழமை அதிகாலை மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷின் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாகர் தீவுக்கும், அண்டை நாட்டில் மோங்லாவுக்கும் இடையில் கரையை கடந்தது.
தீவிர புயலானது, திங்கள் கிழமை அதிகாலை 12:30 மணியளவில் வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையோரப் பகுதியைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெமல் புயல், நேற்று இரவு முதல் கரையை கடக்க தொடங்கி திங்கள்கிழமை காலை வரையிலான நேரத்துக்கு இடையில் கரையை கடந்து வலுவிழந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகமானது சுமார் 135 கிலோமீட்டர் வேகம் வரை இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
VIDEO | Cyclone Remal, which made landfall on the coasts of West Bengal last night (May 26), left several trees uprooted in Kolkata. Rainfall continues in several parts of the state while the cyclone has weakened.
— Press Trust of India (@PTI_News) May 27, 2024
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/8mNEOU7Jsq
தற்போது எப்படி?
புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் இன்று முழுவதும் நீடிக்கும் என வானிலை தெரிவித்துள்ளது. தெற்கு வங்காளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாளை முதல் வானிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VIDEO | Cyclone Remal, which made landfall on the coasts of West Bengal last night (May 26), has raised water levels in the surrounding region. Visuals of water entering the areas around the Gangasagar river embarkment.
— Press Trust of India (@PTI_News) May 27, 2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/17szrkeRp1
பாதிப்பு:
பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்கம்பங்கள் சரிந்தன.
சில குடியிருப்புகளும் தரைமட்டமாகின.
சூறாவளி காரணமாக சுமார் 2,00,000 பேர் மாற்று இடத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
புயல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
VIDEO | Cyclone Remal: Waterlogging reported in South Kolkata, West Bengal, a day after Cyclone Remal's landfall. pic.twitter.com/2SaqVSTk4r
— Press Trust of India (@PTI_News) May 27, 2024
மேற்கு வங்கம் மாநிலம் மட்டுமன்றி, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின.
ரயில், விமான சேவை பாதிப்பு:
கொல்கத்தா விமான நிலையம் 21 மணிநேரங்களுக்கு விமானச் செயல்பாடுகளை நிறுத்தியதால், 394 விமானங்கள் பறக்கவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது, கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தில் கணிசமான இடையூறுகள் ஏற்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் நாளைதான் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.