India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

India Citizenship: வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை..
இந்திய குடியுரிமையை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றது தொடர்பாக, சோனியா காந்தி மீண்டும் சட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த விஷயத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சூழலில், ஒருவர் எப்படி இந்திய குடிமகனாக முடியும்?அதற்கான விதிகள் என்ன என்பதை இங்கே அறியலாம். இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும், நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $7.3 டிரில்லியன் ஆகும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் வேலை செய்ய, படிக்க, திருமணம் செய்து கொள்ள அல்லது நீண்ட காலமாக இங்கேயே குடியேற பலர் இந்திய குடிமக்களாக மாற முயல்கின்றனர். இந்திய குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் (MHA) நிர்ணயிக்கப்பட்ட சில விதிகள் மற்றும் சட்டத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்திய குடியுரிமைக்கு எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடியுரிமைக்கு, நீங்கள் உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiancitizenshiponline.nic.in ஐப் அணுஅ வேண்டும், அங்கு நீங்கள் பதிவு செய்யலாம்.
பிறக்கும்போதே குடியுரிமை
1950 முதல் 1987 வரை இந்தியாவில் பிறந்த ஒருவர் பிறப்பால் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுகிறார். 1987க்குப் பிறகு, விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும்.
வம்சாவளி மூலம் குடியுரிமை
ஒருவர் இந்தியாவிற்கு வெளியே பிறந்து இந்திய பெற்றோரைக் கொண்டிருந்தால், அவர்கள் வம்சாவளி மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். பிறப்பு இந்திய தூதரகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு மூலம் குடியுரிமை
வெளிநாட்டினர் சில சூழ்நிலைகளில் இந்தியாவில் குடியுரிமை பெறலாம். அவை:
- இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருத்தல்
- இந்திய குடிமகனை திருமணம் செய்து கொள்வது
- இந்திய வெளிநாட்டு குடிமகன் (OCI) அட்டை வைத்திருப்பவராக இருத்தல்
- பெற்றோர் இந்தியர்களாக இருத்தல்
CAA இன் கீழ் குடியுரிமை
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் பௌத்தர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினராக இருந்தால், CAA அதாவது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்த பின்னரே நீங்கள் குடியுரிமை பெற முடியும். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















