Rahul Gandhi : குளு குளு ஜம்மு காஷ்மீர்: பனிச்சறுக்கில் விளையாடிய ராகுல்! இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ
ஜம்மு காஷ்மீர் குல்மார்க் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi : ஜம்மு காஷ்மீர் குல்மார்க் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவனத்தை ஈர்த்த நடைபயணம்
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், 146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் ஜனவரி 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நடைபயணத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
தமிழ்நாட்டில் நடைபயணம் நடந்தபோது, ராகுல் காந்தியிடம் பேசிய சில மூதாட்டிகள், அவருக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக கூறிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக, நடைபயணத்தின் இறுதி நாள் அன்று பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் குழந்தைகள் போல விளையாடிய சம்பவம் அனைவரின் மனதையும் ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ராகுல்
இதனிடையே நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவு பெற்ற நிலையில், தனிப்பட்ட முறையில் ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள குல்மார்க் நகரில் தங்கியுள்ளார். குல்மார்க் செல்லும் வழியில் தாங்மார்க் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார் ராகுல் காந்தி.
As a reward, Rahul Ji treating himself to a perfect vacation in Gulmarg after successful #BharatJodoYatra.#RahulGandhi@RahulGandhi pic.twitter.com/DDHCDluwCC
— Farhat Naik (@Farhat_naik_) February 15, 2023
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அவருடன் பாதுகாவலர்கள், கட்சினர்களுடன் பனிச் சறுக்கு விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்டார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க