Congress Manifesto Committee: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகள் : சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்..!
Congress Manifesto Committee: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை நியமித்து காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Congress Manifesto Committee: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய, ப. சிதம்பரம் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு:
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவை அறிவித்தது. இதில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமைத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க இந்தக் குழு செயல்படும்” என கூறினார்.
Congress President Shri @kharge has constituted the Manifesto Committee for the upcoming General Elections 2024 with immediate effect. pic.twitter.com/AWjqf5jtnk
— All India Mahila Congress (@MahilaCongress) December 22, 2023
தேர்தல் அறிக்கை குழு விவரங்கள்:
16 பேர் கொண்ட இந்த குழுவிற்கு கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரம் தலைவராக நியமிகப்பட்டுள்ளார். டி.எஸ்.சிங்தேவ் ஒருங்கிணைப்பாளராக இருக்க பிரியங்கா காந்தி, சித்தராமையா, சசி தரூர், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கைக்கங்கம், கௌரவ் கோகோய், பிரவீன் சக்ரவர்த்தி, இம்ரான் பிரதாப்கார்ஹி, கே ராஜு, ஓம்கார் சிங் மார்க்கம், ரஞ்சித் ரஞ்சன், ஜிக்னேஷ் மேவானி, குர்தீப் சப்பல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக, முன்னதாக, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அகில இந்திய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க ஐந்து பேர் கொண்ட தேசியக் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவிற்கு மோகன் பிரகாஷ் தலைமை தாங்குகிறார். அதில், முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் மட்டுமின்றி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒப்புக்கொள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் காங்கிரஸ்:
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆயத்தப் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் தோல்விய சந்தித்து இருந்தாலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால், களப்பணியை இன்னும் தீவிரப்படுத்தினால் அங்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்றலாம் என நம்புகிறது. இதனை கருத்தில் கொண்டே பல்வேறு பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் நான்கு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.