Chhattisgarh Working Days: குடியரசு தின நாளில் அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் கொடுத்த சத்தீஸ்கர் அரசு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசுப்பணியாளர்கள் இனி வாரந்தோறும் 5 நாட்கள் மட்டுமே பணியாற்றலாம் என்று அந்த மாநில முதல்வர் பூபேஷ்பாகல் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பொறுப்பு வகித்து வருகிறார். நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு பூபேஷ் பாகல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த மாநில மக்களுக்கு அறிவித்துள்ளார்.
அவற்றில் அந்த மாநில அரசுப்பணியாளர்களுக்கு முக்கிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இதன்படி, இன்று முதல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப்பணியாளர்கள் 5 நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த மாநிலத்தில் அமலில் உள்ள அன்ஷ்தாயி ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
State govt employees to work 5-days a week from now. For pension, state's contribution to be increased from 10% to 14% as part of Anshdayi Pension Scheme: Chhattisgarh Govt in a slew of announcements on the occasion of Republic Day pic.twitter.com/tcQrsiRoAC
— ANI (@ANI) January 26, 2022
மேலும், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளில் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படும் வணிக நடவடிக்கைகளை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்த இந்தாண்டு சட்டம் கொண்டுவரப்படும்.
முனிசிபல் நகராட்சிக்கு வெளியே உள்ள முதலீட்டுப்பகுதிகளில் 500 சதுரமீட்டருக்கு உட்பட்ட பரப்பளவு கொண்ட மனைகளுக்கு எந்தவொரு தலையீடும் இல்லாமல் அனுமதி வழங்கப்படும். நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் அரசு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் இலவச உரிமை என்று அழைக்கப்படும். கற்றல் உரிமம் உருவாக்கும் செயல்முறை எளிதாக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்காக அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து வசதி மையங்கள் தொடங்கப்படும். அரசு ஊழியர்களின் நலன்கருதி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற தொழில்துறை கொள்கையில் திருத்தம் செய்யப்படும்.”
இவ்வாறு அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Watch video : அவென்ஞ்சர்ஸ் எண்டு கேம்மாக மாறிய பஞ்சாப் எலெக்சன்...போட்டிபோட்டு வீடியோ பகிரும் தேசிய கட்சிகள்!
மேலும் படிக்க : Republic Day 2022 LIVE: தேசியக் கொடியேற்றினார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்