Watch video : அவென்ஞ்சர்ஸ் எண்டு கேம்மாக மாறிய பஞ்சாப் எலெக்சன்...போட்டிபோட்டு வீடியோ பகிரும் தேசிய கட்சிகள்!
முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியை மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ தோராக சித்தரித்து வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்றின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா..? அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன் அடிப்படையில், கோவா – 40,பஞ்சாப்-117, உத்தரகாண்ட்-70, மணிப்பூர்-60, உ.பி – 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலானது பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தெருவோர பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆன்லைன் வாயிலாக மக்களை கவர வித்தியாசமான முறையில் வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இம்முறை, முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியை மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ தோராக சித்தரித்து வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. தற்போது அந்த வீடியோ வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
We will do whatever it takes to redeem our beloved state from the clutches of evil forces working against the interest of Punjab and its people. #CongressHiAyegi pic.twitter.com/6lVxqkN4VC
— Punjab Congress (@INCPunjab) January 24, 2022
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'அவென்ஞ்சர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபாலோ, கிறிஸ் எவன்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் இடி மற்றும் மின்னலின் கடவுளை அடிப்படையாகக் கொண்ட தோரின் முகத்தை பஞ்சாப் முதலமைச்சராக உள்ள சன்னியின் முகத்தை வைத்து வெளியிட்ட வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தி ஹல்க் என்றும், நவ்ஜோத் சிங் சித்துவை கேப்டன் அமெரிக்கா என்றும் சித்தரித்துள்ளனர்.
Punjab's next CM is in the house!#AAPdaCM pic.twitter.com/E2EIcxwVep
— AAP (@AamAadmiParty) January 18, 2022
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.'மஸ்த் கலந்தர்' என்ற பாலிவுட் பாடலிலிருந்து எடிட் செய்யப்பட்ட கிளிப்பை ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபின் அடுத்த முதல்வர் என்று பக்வந்த் மானை அறிமுகம் செய்யுமாறு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்