Chandrayaan 4: அடுத்த இலக்கை நிர்ணயித்த இஸ்ரோ.. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் சந்திரயான் 4?
நிலவில் இருக்கும் மண் அல்லது பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான் 4 விண்கலம் வடிவமைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில் தற்போது இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
It's now confirmed that Chandrayaan-4 is going to be a Lunar sample return mission!!
— ISRO Spaceflight (@ISROSpaceflight) November 20, 2023
Details about CH-4:
It'll consist of 4 modules - Transfer, Lander, Ascender & Reentry Module (TM, LM, AM, RM)
A GSLV Mk-2 will launch TM+RM into GTO while a LVM3 will launch AM+LM...(1/2) #ISRO pic.twitter.com/iNmQGc2hJh
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம். முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
அந்த வகையில் சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஜப்பானுடன் சேர்ந்து இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு முன் புரபல்சன் மூலம் உந்து சக்தி பயன்படுத்தி நிலவுக்கு பயணம் மேற்கொண்டது. ஆனால் இந்த முறை ரோபாட்டிக் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஆய்விற்கு பின் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மண் அல்லது பாறையின் மாதிரிகளை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் சந்திரயான் 4 விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், விண்கலத்தில் இருக்கும் ரோவர் இந்தியாவும், லேண்டரை ஜப்பானும் வடிவமைக்கும் எனவும் இதன் ஆயுட்காலம் 6 மாதங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளது. இதில் இருக்கும் ரோவரின் எடை 350 கிலோ ஆகும், அதேபோல் நிலவில் துளையிட ஏதுவாக ரோவரில் இயந்திரங்கள் பொறுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி துளையிடுவதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பாறை அல்லது மண்ணின் மாதிரிகள் கொண்டு வர ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4 விண்கலத்தில் அனுப்பவுள்ள ரோவர் ஒரு கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்ளும். பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முதல்கட்ட சோதனை நடத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் – 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்’ மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கோப முகம் காட்டிய எடப்பாடி..!
Gandhi Talks: கோவா திரைப்பட விழாவில் வெளியான விஜய் சேதுபதியின் ‘காந்தி பேசுகிறார்’!