மேலும் அறிய

Chandrayaan 3 Update: சந்திரயான் 3.. நிலவில் லேண்டர் கதை ஓவர்.. இனி எல்லாமே பிரக்யான் ரோவர் கிட்டதான் இருக்கு.. என்னென்ன செய்யும் தெரியுமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய பணிகளை செய்ய உள்ள, பிரக்யான் எனும் ரோவரின் வேலை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய பணிகளை செய்ய உள்ள, பிரக்யான் எனும் ரோவரின் வேலை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சந்திரயான் 3 திட்டம்:

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 20 நாட்கள் பயணத்திற்குப் பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த விண்கலம், கடந்த 16ம் தேதி நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, மூன்று தினங்களுக்கு முன்பாக விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டது. பின்பு இரண்டு கட்டங்களாக தூரத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவ்லும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Chandrayaan 3 Update: சந்திரயான் 3.. திக், திக் 15 நிமிடங்கள்.. 270 நொடிகளில் 6 கட்டங்கள், லேண்டர் தரையிறங்குவது எப்படி?

லேண்டர் பணி ஓவர்:

தொடர்ந்து, வரும் 23ம் தேதியன்று மாலை 5.45 மணியளவில் லேண்டர் அமைப்பு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. அதிலிருந்து ரோவர் வெளியேறியதுமே லேண்டாரின் பணி என்பது 99 சதவிகிதம் அளவிற்கு நிறைவடைந்து விடும்.  அதன் பிறகு எல்லாமே ரோவரின் மாயாஜாலம் தான். சந்திரயான் 3 திட்டத்தின் பெரும்பாலான பணிளே அங்கிருந்து தான் தொடர உள்ளது. 

பிரக்யான் ரோவர்:

2019ம் ஆண்டில் சந்திரயான் 2 திட்டத்தின் போது இந்த லேண்டரை தரையிறக்கும் கட்டத்தில் தான் இந்தியா வெற்றியை நூலிழையில் தவறவிட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திட்டமிட்டபடி இஸ்ரோவின் பணிகள் முடிக்கப்பட்டால், நிலவின் மேற்பகுதியில் ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா பெறும். ஞானம் என்று பொருள்படும் பிரக்யான் என்ற பெயர் தான்  ரோவருக்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரக்யான் வடிவமைப்பு:

தற்போது லேண்டருக்குள் அமைதியாக காத்திருக்கும் 26 கிலோ எடைகொண்ட இந்த ரோவரில் 6 சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நிலவின் மேற்பகுதியில் 500 மிட்டர் தூரம் வரையில் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு செண்டி மீட்டர் வேகத்தில் இந்த ரோவர் பயணிக்கும். 50 வாட்ஸ் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள் ரோவரின் மீது பொருத்தப்பட்டுள்ளது.

ஆய்வு சாதனங்கள்:

ஸ்டீரியோஸ்கோபிக் கேமரா அடிப்படையிலான 3டி விஷன் இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது. இது நிலப்பரப்பின் டிஜிட்டல் உயர மாதிரிகளை உருவாக்குவது, பாதை திட்டமிடல் மற்றும் முன்னேறி செல்வதற்கு உதவுகிறது. இதன் மூலம், சந்திரனின் தென் துருவத்தின் மேற்பரப்பு முதல் முறையாக மனிதனால் காணப்பட உள்ளது. ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இவை விரிவான ரசாயன பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. 

எத்தனை நாட்கள் ஆய்வு செய்யும்?

புவியின் நேரப்படி பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். இது நிலவின் நேரப்படி வெறும் ஒருநாள் மட்டுமே ஆகும். இந்த குறுகிய காலகட்டத்தில் நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரோவர் சேகர்த்து புவிக்கு அனுப்ப உள்ளது.

முதன்மை பணி என்ன?

பிரக்யான் ரோவரின் முதன்மை பணி என்பது சந்திரனின் அமைப்பு மற்றும் அதில் உள்ள கனிமங்களின் ரகசியங்களை வெளிக்கொணர வேண்டும் என்பது தான். அதோடு அதிநவீன அறிவியல் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோவர் மூலம், நிலவின் பரிணாம வளர்ச்சி பற்றிய நுண்ணறிவை பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது  சந்திரனின் புதிரான வரலாற்றை விஞ்ஞானிகள் ஒன்றிணைக்க உதவும். அதன்படி, ரோவர் செய்ய உள்ள ஆய்வுகள் என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கனிமங்கள் தொடர்பான ஆய்வு:

பல்வேறு கனிமங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதும் ரோவரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். அதன்படி,  மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு போன்ற பல முக்கிய கனிமங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்லது. இது நிலவின் கனிமவளம் மற்றும் அமைப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை அறிய உதவும்.

நிலவின் வளிமண்டலம் தொடர்பான ஆய்வு:

பொதுவாக நீடித்து வந்த ஒரு நம்பிக்கைக்கு மாறாக, நிலவு அதன் மேற்பரப்புக்கு அருகில் ஒரு நுட்பமான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. பிரக்யான் இந்த புதிரான நிலவின் வளிமண்டலத்தை ஆராய உள்ளது.  அப்போது, பகல் மற்றும் இரவு இடையே வளிமண்டலத்தின் மாற்றங்கள், மின்னூட்டப்பட்ட துகள்கள் மற்றும் மேற்பரப்புக்கு அருகாமையில் அவற்றின் நடத்தை ஆகியவை கண்காணிக்கப்பட உள்ளன. இந்த ஆய்வு நிலவின் வளிமண்டல இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை அளிக்கும் என நம்பப்படுகிறது.

லேசர் பகுப்பாய்வு:

ரோவர் செய்ய உள்ள பல்வேறு ஆய்வுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, லேசர் கற்றகளை கொண்டு செய்ய உள்ள சோதனை தான். அதன்படி, லேசர் ஒளிக்கற்றை செலுத்தி நிலவின் மேற்பகுதி உருக்கப்படும். அப்போது வெளிப்படும் வாயுக்களை ஆய்வு செய்து, நிலவின் அமைப்பு எப்படிபட்டது என்பது ஆராயப்பட உள்ளது. மேலும், நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 சென்டி மீட்டர் ஆழத்திற்கு துளையிடப்பட்டு, அதன் மின்சார மற்றும் வெப்ப பண்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதோடு, அங்குள்ள மின்சாரம் கடத்தும் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

தகவல்கள் எப்படி புவிக்கு வரும்:

நிலவின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் பயணத்தின் போது, ​​பிரக்யான் ரோவர் நிகழ்நேர பகுப்பாய்வுகளை அங்கேயே நடத்தி, சேகரிக்கப்பட்ட தரவுகளை விக்ரம் லேண்டருக்கு அனுப்பும். அங்கு விக்ரம் லேண்டர் ஒரு ரிலேவாக செயல்பட்டு, அந்த தரவுகளை கூடுதல் ஆய்வுக்காக பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
Embed widget