Thrill Video : திருமண பந்தலுக்குள் புகுந்த காளை மாடு.. பரபர சம்பவங்கள்.. வைரலாகும் வீடியோ
கல்யாண வீட்டில் புகுந்த காளை மாடு எல்லோரையும் கதி கலங்கச் செய்துள்ளது.
திருமணம் என்றால் சொந்தங்களும், பந்தங்களும், நட்புக்களும் புடை சூழ வந்து கவுரவிப்பார்கள். சில நேரங்களில் யார் என்றே முகம் தெரியாதவர்கள் கூட கூட்டத்டோடு கூட்டமாக வந்து விருந்தை சிறப்பித்துவிட்டுச் செல்வார்கள்.ஆனால் இங்கொரு கல்யாண வீட்டில் புகுந்த காளை மாடு எல்லோரையும் கதி கலங்கச் செய்துள்ளது.
இதனை நரேந்திர சிங் என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு கருப்பு நிற காளை ஒன்று கல்யாண பந்தலுக்குள் நுழைகிறது. பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கிறது. அந்தக் காளையை மண்டபத்தில் இருந்த நபர் துரத்த முற்பட அதுவோ அங்குமிங்கும் ஓடுகிறது. அதற்கு பயந்து எல்லோரும் நாலா பக்கமும் தெரித்து ஓட அந்த காளை மாடு உணவு பரிமாறப்படும் இடத்தை நோட்டமிட்டுவிட்டு ஒரு பக்கமாக ஓடிவிடுகிறது.
வீடியோவைக் காண:
बिन बुलाए बाराती...#bull #wedding #TrendingNow #Trending #viral pic.twitter.com/4LPMo6OhCt
— Narendra Singh (@NarendraNeer007) December 8, 2022
இந்த வீடியோவுக்குக் கீழ் பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.