மேலும் அறிய

Budget 2024:வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்; சுவாரஸ்ய வரலாற்று தகவல்கள்!

Budget 2024: நாடாளுமன்ற பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றம் குறித்து வரலாற்று தகவல்களை இங்கே காணலாம்.

ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 23-ம் தேதி 2024-2025-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் முதலாவது மத்திய பட்ஜெட் இது. 

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக முழுநேர நிதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். ஆறு முறை நிதி அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனைச் சேரும். முன்னாள் பிரதமர் மோராஜி தேசாயின் சாதனை சமன் செய்தார். 18-வது மக்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த இடைக்கால பட்ஜெட் என்பதால் ஜூலை 23-ம் தேதி நடைபெறும் பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆறாவது முறையாக கணக்கில் கொள்ளப்ப்படுகிறது. 23-ம் தேதி காலை 11 மணிக்கு நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நேரம் முன்பு மாலை 5 மணியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் எப்படி மாறியது என்று காணலாம். 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் பட்ஜெட்  மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வசதியாக இருந்தது, ஏனெனில், இந்தியாவில் மாலை 5 மணி எனும்போது லண்டலின் ( GMT+ 5.30 மணி நேரம்) காலை 11.30 மணியாக இருக்கும். இதனாலேயே மாலை 5 மணிக்கு தாக்கல் செய்ய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், 1999 வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு 1999- இந்த நடைமுறையை மாற்றியது. சுதந்திரத்திற்கு பிறகும் லண்டல் நேர முறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; பட்ஜெட்டில் அறிவிப்புகள் குறித்து ஆரோக்கியமான கலந்தாலோசனை நடைபெற வேண்டும் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1999-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்த மாற்றத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 

போலவே, பிப்ரவரி மாதம் கடைசி நாளில்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. அதை முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாற்றினார். அதிலிரிந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கான (ஏப்ரல், 1) நேரம் இருப்பதால், திட்டங்களை அமல்படுத்த நேரம் இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

  • 1947-1955 வரை மத்திய பட்ஜெட் ஆங்கில மொழியில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது,. நாட்டின் மூன்றாவது நிதி அமைச்சரான சி.டி. தேத்முக் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நிதி அறிக்கை வெளியிட முடிவு செய்தார். இவர் நிதியமைச்சராவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநராக பொறுப்பி வகித்தார். 
  • 2017-ம் ஆண்டிற்கு முன்பு வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 
  • 1924- 2016-ம் ஆண்டுவரை ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் இரண்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது. 
  • 2021-ம் ஆண்டு முதல் காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget