Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, July 15, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
- அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
- நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி கடிதம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை - தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் அதிரடி
- தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தினமும் 8000 கன அடி தண்ணீர் திறக்க முடிவு
- 122வது பிறந்த நாள் - காமராஜர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை
- மாட்டு வியாபாரி மகன் முதல் போலீஸ் அதிகாரி வரை - 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது
- 10ம் வகுப்பு மாணவியை கடத்திய 17 வயது சிறுவன் - இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் விபரீதம்
- கார்ப்ரேட் நிறுவனங்களை விட தனிநபரிடம் அதிகளவு வருமான வரி வசூல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
- எக்ஸ் சமூக ஊடகத்தில் உலக தலைவர்களில் அதிக ஃபாலோவர்கள் - பிரதமர் மோடி சாதனை
- காஷ்மீருக்குள் உடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
- இடுக்கியில் ஜீப்களில் சாகச பயணம் - மலை உச்சியில் சிக்கி தவித்த 40 சுற்றுலா பயணிகள் மீட்பு
- அமெரிக்க தேர்தல் கருத்தையே மாற்றப்போகும் சம்பவம் - டிரம்ப் மீதான தாக்குதல் தொடர்பாக வல்லுநர்கள் கருத்து
- இஸ்ரேல் தாக்குதலில் 141 பேர் உயிரிழப்பு - 400 பேர் காயம்
- நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி தேர்வு
- விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்காரஸ்
- யூரோ கால்பந்து போட்டி - இங்கிலாந்து அணியை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
- டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
Post Office : தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44, 228 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
குஜராத்தின் வதோதராவுக்கு திரும்பிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு தனது சொந்த ஊரான குஜராத்தின் வதோதராவுக்கு திரும்பிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு!
Thoothukudi Firing : தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் காட்டம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் காட்டம்.