Breaking News LIVE, JULY 14: வேலூர்: காட்பாடியில் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு - மகளை பார்க்க சென்ற இடைத்தில் சோகம்
Breaking News LIVE, July 14, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி - டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்து இருக்கும் - பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
- மதுவிலக்குத் திருத்த மசோதா அமலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம்
- பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224 கோடி வருவாய் - முன்னெப்போதும் இல்லாத வருவாய் என தகவல்
- ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன - பிரதமர் மோடி பேச்சு
- நாட்டின் 7 மாநிலங்களில் நடந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல் - 10 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி - பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி
- அசாம் மாநில வெள்ள பாதிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு - நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 2.95 லட்சம் பேர்
- ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தத்தில் திருத்தம் - துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்
- அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் அதிபர் டிரம்பின் மீது துப்பாக்கிச்சூடு - காதில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்
- டிரம் மீதான தாக்குதலுக்கு அதிபர் பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் - தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்
- ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தகவல் - 90 பேர் உயிரிழப்பு
- லக்னோவில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் அடிதடி - திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் - 3-1 என கைப்பற்றியது இளம் இந்திய அணி
- ஐரோப்பா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி - இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
- டி.என்.பி.எல்: நெல்லை அணியை வீழ்த்தி கோவை வெற்றி
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த கார்லோஸ் அல்கராஸ்!
விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ். 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
வேலூர்: காட்பாடியில் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு - மகளை பார்க்க சென்ற இடைத்தில் சோகம்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கணவர், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செவிலியர் கல்லூரியில் படிக்கும் மகளை பார்க்க செல்லும் வழியில் நடந்த விபத்தில் தந்தை தாய் உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Breaking News LIVE, JULY 14: பொறுமையாக ஆடி வரும் ஜிம்பாப்வே அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்து வரும் ஜிம்பாப்வே அணி, 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
Breaking News LIVE: தமிழ்நாட்டில் குறையும் வெயிலின் உக்கிரம் - நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மதுரை விமான நிலையத்தில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
Breaking News LIVE: தமிழகத்திற்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடக முடிவு
கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி விநாடிக்கு 11,500 கன அடி நீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. தினமும் ஒரு டிம்.எம்.சி தண்ணீர் திறந்துவிட முடியாது எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கபினியில் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் 8,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.