Breaking News LIVE: தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளி பதக்கம் வென்றார்.
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
- சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஃபார்முலா 4 கார் பந்தயம்
- ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் நடிகர் நாக சைதன்யா அணி வீரர் முதலிடம்
- இந்திய விளையாட்டுத்துறையின் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்வவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- விடாமல் பெய்து வரும் கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடும் பாதிப்பு
- ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 ரயில்கள் ரத்து; 46 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – பிரதமர் மோடி
- மலையாள திரையுலகை நடுங்க வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு – ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
- பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவிய நடிகர்கள்
- பாலியல் குற்றங்கள் அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது – சீமான் வேதனை
- தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.10,181 கோடி வசூல்
- பாராலிம்பிக்கில் இந்திய வீரர்களுக்கு நேற்று 2 பதக்கங்கள்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் , இறுதி போட்டியில் மோதினார். இறுதிப் போட்டியில் 21-17,21-10 என்ற பள்ளியில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும் , இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு தற்பொழுது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா! படகில் சென்று சந்திரா பாபு ஆய்வு
வெள்ளம் மிதக்கும் ஆந்திரா! படகில் சென்று சந்திரா பாபு ஆய்வு #chandrababunaidu #andhrapradesh #andhrapradeshflood #andhrapradeshnews #tamilnews pic.twitter.com/Th52jDtXPY
— ABP Nadu (@abpnadu) September 2, 2024
Suresh Gopi ON AIIMS : எய்ம்ஸ் பற்றி மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
5 ஆண்டுகளில் கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை என்றால், நான் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் என நடிகரும், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
திருச்சி NIT விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் சீண்டல்: உண்மை கண்டறியும் குழு அமைப்பு
களைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி.. முதலிடம் பிடித்தார் திருநங்கை ஹேமா.
களைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி..
திண்டுக்கலில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் தேனியை சேர்ந்த ஹேமா என்பவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஹேமாவுக்கு மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் பட்டம் வழங்கப்பட்டது. தேனியைச் சேர்ந்த சுருதி, தீக்ஷனா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். நடை, உடை, பொது அறிவு வினாவிடை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.