Breaking News LIVE: திமுக இளைஞரணி மாநாடு; இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் பயணம்:
- சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார்
- அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார்
- பின்னர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார்
- அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
- தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்
- இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார்
- தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
- பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை பகுதியை அடைவார்
- அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் பிரதமர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்
4000 போலீசார் குவிப்பு:
பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 4000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணிக்கும் மார்கத்தில் தார் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் உள்ளிட்டவை பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், நேற்று பாதுகாப்பு ஒத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வரும் நேரத்தில் மற்ற பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK Youth Wing Conference: கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் முதலமைச்சர்
இளைஞரணி மாநாட்டினையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்து வருகின்றார்.
DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பன் உதயநிதி
திமுக மாநாட்டு நிகழ்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனி மேடையில் அமர்ந்தபடி பார்வையிட்டு வருகிறார். அவருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் இளைஞர் அணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மகன் இன்பன் உதயநிதி மற்றும் திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர்.
PM Modi: மடத்திற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடிந்து பிரதமர் மோடி ராமகிருஷ்ண மடத்திற்கு புறப்பட்டார்.
DMK Youth Wing Conference: திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்
கருப்பு சிவப்பு உடைய அணிந்து இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வரும் இளைஞர் அணி நிர்வாகிகளை கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை ஏற்றி வைத்தார் முதலமைச்சர்
திமுக இளைஞரணி மாநாடு சுடர் மாநாட்டு திடலை அடைந்தது . திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இடம் மாநாட்டு சுடர் ஒப்படைப்பு. அவர் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுச் சுடரை ஏற்றி வைத்தார்.