மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

Breaking News LIVE: கன்னியாகுமரியில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: கன்னியாகுமரியில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

Background

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 12ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 601வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

13:15 PM (IST)  •  12 Jan 2024

கன்னியாகுமரியில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டுள்ளார்.

12:37 PM (IST)  •  12 Jan 2024

மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயார் - அண்ணாமலை

2026 மக்ளவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகிவிட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

11:40 AM (IST)  •  12 Jan 2024

நெல்லையில் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நெல்லையில் மேயருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

11:08 AM (IST)  •  12 Jan 2024

பொங்கல் பண்டிகை! 1.25 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் செல்ல முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.25 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

10:49 AM (IST)  •  12 Jan 2024

பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் ஆஜர்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Embed widget